‘தினத்தந்தி’ புகார் பெட்டி


‘தினத்தந்தி’ புகார் பெட்டி
x
தினத்தந்தி 11 Dec 2021 3:04 AM IST (Updated: 11 Dec 2021 3:04 AM IST)
t-max-icont-min-icon

‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு 91761 28888 என்ற வாட்ஸ்-அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு 91761 28888 என்ற வாட்ஸ்-அப் எண்ணுக்கு வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

சுகாதார சீர்கேடு
நெல்லை மேலப்பாளையம்- அம்பை ரோடு வி.எஸ்.டி.பள்ளிவாசல் அருகில் உள்ள குளக்கரையில் சிலர் குப்பைகள், இறைச்சி கழிவுகளை கொட்டி செல்வதால் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. எனவே அப்பகுதியில் போதிய குப்பைத்தொட்டிகளை வைத்து, குப்பைகளை தினமும் முறையாக அகற்ற வேண்டும்.
- ஆரிப் பாஷா, மேலப்பாளையம்.

வடியாத மழைநீர்
நெல்லை அருகே கோபாலசமுத்திரம் யாதவர் வடக்கு தெருவில் பல நாட்களாக மழைநீர் வடியாததால், சுகாதாரக்கேடு ஏற்படும் நிலை உள்ளது. எனவே தேங்கிய மழைநீரை வடிய வைக்க வேண்டும்.
- சிவன், கோபாலசமுத்திரம்.

குண்டும் குழியுமான சாலை
கல்லிடைக்குறிச்சி பொன்மாநகருக்கு செல்லும் சாலை பழுதடைந்து குண்டும் குழியுமாக உள்ளது. சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரத்துக்கு சாலை சேதம் அடைந்து கிடப்பதால், அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்படுகின்றனர். எனவே அந்த சாலையை சீரமைக்க வேண்டும்.
- பானு, பொன்மாநகர்.

தடுப்புச்சுவர் இல்லாத பாலம்
விக்கிரமசிங்கபுரம் காந்திநகர் மேலத்தெருவுக்கு செல்லும் வழியில் உள்ள ஓடைப்பாலத்தின் இருபுறமும் தடுப்புச்சுவர் இல்லாமல் உள்ளது. மேலும் அந்த சாலை குண்டும் குழியுமாக உள்ளது. எனவே பாலத்தின் இருபுறமும் தடுப்புச்சுவர் அமைத்து, சாலையை சீரமைக்க வேண்டும்.
- ஜெபமணி தமிழ்வேந்தன், காந்திநகர்.

கழிவறை புதுப்பிக்கப்படுமா?
திசையன்விளை 13-வது வார்டு பகுதியில் உள்ள பொது கழிவறையின் மின்மோட்டார் பழுதடைந்து உள்ளது. மேலும் கழிவறையின் தரைத்தளமும் சேதமடைந்துள்ளது. எனவே மின்மோட்டாரை பழுதுநீக்கி, கழிவறையை புதுப்பித்து மீண்டும் மக்களின் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும்.
- முத்து இசக்கிகுமார், திசையன்விளை.

சாலையில் வழிந்தோடும் கழிவுநீர்
பாளையங்கோட்டை என்.ஜி.ஓ. ‘பி’ காலனி ரேஷன் கடையின் முன்பு 4 ரோடு சந்திப்பு பகுதியில் பாதாள சாக்கடை மூடியில் இருந்து கழிவுநீர் வெளியேறி சாலையில் தேங்குவதால் சுகாதாரக்கேடு ஏற்படுகிறது. எனவே பாதாள சாக்கடையில் ஏற்பட்ட அடைப்புகளை அகற்றி, கழிவுநீர் முறையாக வழிந்தோட செய்ய வேண்டும்.
- ஆறுமுகம், என்.ஜி.ஓ. ‘பி’ காலனி.

அடிப்படை வசதிகள் தேவை
தென்காசி மாவட்டம் மேலப்பாவூரில் தேங்கிய மழைநீரால் தெருக்கள் சேறும் சகதியுமாக உள்ளது. எனவே அங்கு சாலை, வாறுகால் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை நிறைவேற்ற வேண்டும்.
- தங்கராஜ், மேலப்பாவூர்.

ஆபத்தான பயணம்
சுரண்டை- சேர்ந்தமரம் மெயின் ரோடு ஆனைகுளத்தில் உள்ள காமராஜர் அரசு கல்லூரியில் ஏராளமான மாணவ-மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்த வழித்தடத்தில் போதிய பஸ்கள் இயக்கப்படாததால் மாணவர்கள் படிக்கட்டுகளில் ஆபத்தான முறையில் தொங்கிபடி செல்லும் அவலநிலை உள்ளது. எனவே காலை, மாலை நேரங்களில் கூடுதல் பஸ்கள் இயக்க வேண்டும்.
- மணிகண்டன், சேர்ந்தமரம்.

வீடுகளை சூழ்ந்த மழைநீர்
தூத்துக்குடி நேதாஜி நகர் தெற்கு தெருவில் நீண்ட நாட்களாக மழைநீர் குளம் போன்று தேங்கியுள்ளது. வீடுகளை சூழ்ந்த தண்ணீரால் பொதுமக்கள் பெரிதும் அவதிப்படுகின்றனர். எனவே தேங்கிய மழைநீரை வடிய வைக்க வேண்டும்.
- ராஜகோபால், நேதாஜி நகர்.

வாறுகால் அமைக்கப்படுமா?
தூத்துக்குடியை அடுத்த புதுக்கோட்டையில் பெரும்பாலான சாலைகள் பழுதுடைந்து குண்டும் குழியுமாக உள்ளது. மழைநீரும் சாலையில் தேங்குவதால் சேதம் அடைந்து காட்சி அளிக்கிறது. எனவே அங்கு புதிதாக சாலை மற்றும் வாறுகால் வசதி அமைக்க வேண்டும்.
- உடையார், புதுக்கோட்டை.

பஸ் இயக்க நேரம் மாற்ற வேண்டும்
ஓட்டப்பிடாரம் அருகே கொல்லம்பரம்பில் இருந்து தினமும் காலை 7 மணிக்கு தூத்துக்குடிக்கு அரசு டவுன் பஸ் இயக்கப்பட்டது. தற்போது இந்த பஸ் காலை 6 மணிக்கே புறப்பட்டு செல்வதால் மாணவ-மாணவிகள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். எனவே வழக்கமான நேரத்தில் பஸ்சை இயக்க வேண்டும்.
- பிச்சையா, தூத்துக்குடி.

கால்நடைகளால் போக்குவரத்துக்கு இடையூறு
உடன்குடி சத்யமூர்த்தி பஜாரில் சுற்றித்திரியும் கால்நடைகளால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுவதுடன் அடிக்கடி விபத்துகளும் நிகழ்கின்றன. எனவே சாலைகளில் திரியும் கால்நடைகளை பிடித்து அப்புறப்படுத்த வேண்டும்.
- ராஜேஷ், உடன்குடி.

Next Story