கொரோனாவுக்கு முதியவர் பலி


கொரோனாவுக்கு முதியவர் பலி
x
தினத்தந்தி 11 Dec 2021 3:57 AM IST (Updated: 11 Dec 2021 3:57 AM IST)
t-max-icont-min-icon

கொரோனாவுக்கு முதியவர் பலியானார்.

சேலம்:
சேலம் மாவட்டத்தில் நேற்று முன்தினம் கொரோனாவுக்கு 42 பேர் பாதிக்கப்பட்டனர். இந்த நிலையில் நேற்று பாதிப்பு சற்று அதிகரித்து 45 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது. சேலம் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் 15 பேர், சேலம் ஒன்றியத்தில் 18 பேர், ஆத்தூர் பகுதியில் 9 பேர், மேட்டூரில் ஒருவரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். இதுதவிர சேலம் மாவட்டத்துக்கு நாமக்கல் மற்றும் ஈரோட்டில் இருந்து வந்த தலா ஒருவரும் கொரோனா பாதிப்புக்கு ஆளாகினர். இவர்கள் மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த 46 பேர் குணமடைந்து விட்டதால் அவர்கள் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். 498 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மாவட்டத்தில் கொரோனாவுக்கு இதுவரை ஒரு லட்சத்து 1,715 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். சேலத்தை சேர்ந்த 82 வயதுடைய முதியவர் கொரோனாவுக்கு சிகிச்சை பலனின்றி தனியார் ஆஸ்பத்திரியில் பரிதாபமாக இறந்தார். கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 1,715 ஆக அதிகரித்துள்ளது.

Next Story