ஓமலூர் அருகே சாராயத்தில் விஷத்தை கலந்து 2 பேர் கொலையா?-பெண்கள் உள்பட 4 பேரிடம் போலீசார் விசாரணை


ஓமலூர் அருகே சாராயத்தில் விஷத்தை கலந்து 2 பேர் கொலையா?-பெண்கள் உள்பட 4 பேரிடம் போலீசார் விசாரணை
x
தினத்தந்தி 11 Dec 2021 4:34 AM IST (Updated: 11 Dec 2021 4:34 AM IST)
t-max-icont-min-icon

ஓமலூர் அருகே சாராயத்தில் விஷத்தை கலந்து 2 பேரை கொலை செய்தார்களா? என பெண்கள் உள்பட 4 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

ஓமலூர்:
ஓமலூர் அருகே சாராயத்தில் விஷத்தை கலந்து 2 பேரை கொலை செய்தார்களா? என பெண்கள் உள்பட 4 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
சாராயம்
சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே தீவட்டிப்பட்டி கணவாய் புதூர் ஊராட்சி கே.மோரூர் பகுதியை சேர்ந்தவர் குமார் (வயது 80). இவர் கடந்த 1-ந் தேதி உடல்நலக்குறைவால் இறந்து விட்டார். இந்த நிலையில் குமாரின் துக்க நிகழ்ச்சியில் கலந்து கொள்ள தாராபுரம் புதூர் பகுதியை சேர்ந்த அவரது தம்பி தட்சிணாமூர்த்தி (65) மற்றும் சங்ககிரி பைபாஸ் குப்பனூர் பகுதியை சேர்ந்த குமாரின் மருமகன் ராமன் (45) மற்றும் உறவினர்கள் வந்தனர். 
தொடர்ந்து கடந்த 8-ந் தேதி இரவு விடிய, விடிய  சடங்குகள் நடந்தன. அப்போது நேற்று முன்தினம் அதிகாலை 4 மணி அளவில் தட்சிணாமூர்த்தி, ராமன் ஆகியோர் சாராயம் குடித்துள்ளனர்.
2 பேர் சாவு
பின்னர் சிறிது நேரத்தில் 2 பேரும் வாந்தி எடுத்து மயக்கம் அடைந்து உயிரிழந்தனர். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த தீவட்டிப்பட்டி போலீசார் தட்சிணாமூர்த்தி, ராமன் ஆகியோரின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். 
தொடர்ந்து போலீசார் சந்தேக மரணம் என வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். முதல் கட்ட விசாரணையில் 2 பேரும் விஷ சாராயம் குடித்ததால் பலியானதாக தெரியவந்தது.
கொலையா?
இந்த நிலையில் பிரேத பரிசோதனை முடிவில் தட்சிணாமூர்த்தி, ராமன் ஆகியோர் விஷம் கலந்த சாராயத்தை குடித்தது உறுதி செய்யப்பட்டது. எனவே சாராயத்தில் விஷத்தை கலந்து அவர்கள் 2 பேரும் கொலை செய்யப்பட்டார்களா? என போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மேலும் இந்த சம்பவம் தொடர்பாக குமாரின் மகன்கள் வேலுமணி, முருகன் மற்றும் 2 பெண்களிடம் தீவட்டிப்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story