ஐஏஎஸ் அதிகாரிகள் சொத்து விவரங்களை தாக்கல் செய்ய தலைமைச்செயலாளர் உத்தரவு


ஐஏஎஸ் அதிகாரிகள் சொத்து விவரங்களை தாக்கல் செய்ய தலைமைச்செயலாளர் உத்தரவு
x
தினத்தந்தி 11 Dec 2021 10:41 AM IST (Updated: 11 Dec 2021 10:56 AM IST)
t-max-icont-min-icon

ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் தங்களின் அசையா சொத்துக்களின் விவரங்களை தாக்கல் செய்ய ஐ.ஏ.எஸ் அதிகாரிகளுக்கு தலைமை செயலாளர் கடிதம் எழுதி உள்ளார்.

சென்னை,

ஐஏஎஸ் அதிகாரிகள் தங்களது பெயர்களிலோ அல்லது தங்களது குடும்பத்தில் உள்ளவர்களின் பெயர்களிலோ , உறவினர்களின் பெயர்களிலோ சொந்தமாக அசையா சொத்து குறித்த விவரங்கள் இருக்குமாயின் அவற்றை ஆன்லைன் மூலமாக அறிவிக்கலாம் என்ற முறை கடந்த 2017 ஆம் ஆண்டு முதல் நடைமுறைப்படுத்தப்பட்டது. கடந்த ஆண்டு இந்த நடைமுறையை அப்போதைய தமிழக அரசின் தலைமை செயலாளராக இருந்த சண்முகம் அனைத்து ஐஏஎஸ் அதிகாரிகளுக்கும் கடிதம் மூலமாக அறிவுறுத்தினார்.

இந்நிலையில் தமிழகத்தில் பணியில் உள்ள ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் தங்கள் பெயரிலும், தங்களுடைய குடும்பத்தினர் மற்றும் பிற நபர்கள் பெயரிலும் உள்ள தங்களுக்கு சொந்தமான அசையாத சொத்து விவரங்களை தாக்கல் செய்ய தலைமைச் செயலாளர் இறையன்பு உத்தரவிட்டுள்ளார். 

அத்துடன் மத்திய அரசின் உத்தரவின்படி வரும் ஜனவரி 31ஆம் தேதிக்குள் சொத்து விவரங்களை ஆன்லைன் மூலமாக பதிவு செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. சரியான காரணம் என்று சொத்து விபரங்களை தெரிவிக்காமல் இருக்கும் ஐஏஎஸ் அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Next Story