கும்மிடிப்பூண்டி அருகே தனியார் நிறுவன ஊழியர் வீட்டில் நகை-பணம் திருட்டு


கும்மிடிப்பூண்டி அருகே தனியார் நிறுவன ஊழியர் வீட்டில் நகை-பணம் திருட்டு
x
தினத்தந்தி 11 Dec 2021 3:12 PM IST (Updated: 11 Dec 2021 3:12 PM IST)
t-max-icont-min-icon

கும்மிடிப்பூண்டி அருகே தனியார் நிறுவன ஊழியரின் வீட்டில் நகை-பணம் திருடப்பட்டது.

கும்மிடிப்பூண்டி,

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி சிப்காட் அடுத்த பில்லாகுப்பம் கிராமத்தை சேர்ந்தவர் வெங்கடேசன் (வயது 31). இவரது மனைவி பிரியா (32). இருவரும் கும்மிடிப்பூண்டி சிப்காட்டில் உள்ள தனியார் தொழிற்சாலைகளில் தனித்தனியாக வேலை செய்து வருகின்றனர்.

நேற்று காலை வழக்கம் போல இருவரும் வீட்டை பூட்டி விட்டு வேலைக்கு சென்று விட்டனர். காலை 10 மணி அளவில் வெங்கடேசனின் தாயார் முனியம்மாள் (57) வீட்டுக்கு வந்தார். அப்போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அவர் அதிர்ச்சி அடைந்தார்.

வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது தனியறையில் இருந்த பீரோவை உடைத்து அதில் இருந்த 13 பவுன் நகை மற்றும் ரூ.13 ஆயிரம் ரொக்கப்பணம் போன்றவற்றை மர்ம நபர்கள் திருடிச்சென்றிருப்பது தெரியவந்தது.

இதுகுறித்து கும்மிடிப்பூண்டி சிப்காட் போலீசார் வழக்குப்பதிவு செய்து மேலும் விசாரித்து வருகின்றனர்.

Next Story