ஆண்டிப்பட்டி அருகே பூச்சிமருந்தை முகர்ந்து பார்த்த சிறுவன் சாவு
ஆண்டிப்பட்டி அருகே பூச்சிமருந்தை முகர்ந்து பார்த்த சிறுவன் பரிதாபமாக இறந்தான்.
ஆண்டிப்பட்டி:
தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே உள்ள நாகலகவுண்டன்பட்டியை சேர்ந்தவர் சந்தனகுமார். இவருடைய மனைவி மல்லிகா. இவர்களது மகன் துர்கேஷ் (வயது 9) மொட்டனூத்து ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 4-ம் வகுப்பு படித்து வந்தான். கடந்த 6-ந்தேதி மல்லிகாவும், துர்கேஷும் அவர்களுடைய கொட்டைமுந்திரி தோட்டத்தில் பூச்சிமருந்து தெளிக்க சென்றனர். அப்போது அந்த பூச்சிமருந்தை துர்கேஷ் முகர்ந்து பார்த்தான். இதில் அவன் மயங்கி விழுந்தான். இதையடுத்து அவன் உடனடியாக ஆண்டிப்பட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு பின்னர் மேல்சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டான்.
இந்தநிலையில் அங்கு சிகிச்சை பலனின்றி துர்கேஷ் பரிதாபமாக இறந்தான். இதுகுறித்து ராஜதானி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story