அரவைக்காக 2 ஆயிரம் டன் நெல்


அரவைக்காக 2 ஆயிரம் டன் நெல்
x
தினத்தந்தி 11 Dec 2021 10:21 PM IST (Updated: 11 Dec 2021 10:21 PM IST)
t-max-icont-min-icon

மன்னார்குடியில் இருந்து மதுரைக்கு அரவைக்காக 2 ஆயிரம் டன் நெல் சரக்கு ரெயிலில் அனுப்பிவைக்கப்பட்டது.

மன்னார்குடி:
மன்னார்குடியில் இருந்து மதுரைக்கு அரவைக்காக 2 ஆயிரம் டன் நெல் சரக்கு ரெயிலில் அனுப்பிவைக்கப்பட்டது. 
நெல்மூட்டைகள் அனுப்பி வைப்பு
மன்னார்குடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தின் மூலம் செயல்பட்டுவரும் நேரடி கொள்முதல் நிலையங்கள் மூலம் விவசாயிகளிடமிருந்து நெல் கொள்முதல் செய்யப்படுகிறது. கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகளை லாரியில் ஏற்றப்பட்டு சேமிப்புக்கிடங்குகளில் சேமித்து வைக்கப்படுகிறது. பின்னர் பொதுவினியோகத்திட்டத்திற்கு அரிசி வினியோகம் செய்யவும், அரவை செய்யவும் நவீன அரிசி ஆலைகள் உள்ள இடங்களுக்கு லாரிகள் மற்றும் ரெயில் மூலம் நெல் மூட்டைகள் அனுப்பி வைக்கப்படுகிறது. 
2 ஆயிரம் டன் நெல் 
மன்னார்குடி மற்றும் அதன் சுற்றுப்பகுதிகளில் உள்ள நெல் சேமிப்புக்கிடங்குகளிலிருந்து நேற்று 160 லாரிகள் மூலம் 2 ஆயிரம் டன் நெல்மூட்டைகள் மன்னார்குடி ரெயில் நிலையத்திற்கு கொண்டுவரப்பட்டன. பின்னர் நெல்மூட்டைகளை தொழிலாளர்கள் சரக்கு ரெயிலின் 42 வேகன்களில் ஏற்றினர். அதனை தொடர்ந்து மதுரை கூடல்நகருக்கு அரவைக்காக 2 ஆயிரம் டன் நெல் சரக்கு ரெயிலில் அனுப்பி வைக்கப்பட்டது. 

Next Story