லெக்கூரில் வீட்டில் பதுக்கிய ரேஷன் அரிசி பறிமுதல் வாலிபர் கைது


லெக்கூரில்  வீட்டில் பதுக்கிய ரேஷன் அரிசி பறிமுதல் வாலிபர் கைது
x
தினத்தந்தி 11 Dec 2021 10:26 PM IST (Updated: 11 Dec 2021 10:26 PM IST)
t-max-icont-min-icon

லெக்கூரில் வீட்டில் ரேஷன் பதுக்கிய வாலிபர் கைது செய்யப்பட்டாா்.


ராமநத்தம், 

ராமநத்தம் அடுத்துள்ள லெக்கூரை சேர்ந்தவர் கருப்பன் மகன் வெங்கடேசன் (வயது 35). இவரது வீட்டில் ரேஷன் அரிசி பதுக்கி வைத்திருப்பதாக கடலூர் குடிமை பொருட்கள் வழங்கல் குற்ற புலனாய்வு பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. 

அதன்பேரில் சப்- இன்ஸ்பெக்டர் கவியரசன் தலைமையிலான போலீசார், அவரது வீட்டுக்கு வந்து சோதனை செய்தனர். அப்போது, வீட்டின் பின்புறம் இரும்பு கூரை போடப்பட்ட வீட்டில் டிராக்டர் டிப்பரில் தலா 50 கிலோ எடையுடைய 22 சாக்கு மூட்டைகள் இருந்தது. 

அதை கைப்பற்றி பார்த்த போது அதில் ரேஷன் அரிசி இருந்தது தெரியவந்தது. இதையடுத்து  1050 கிலோ ரேஷன் அரிசியையும் டிராக்டரையும் பறிமுதல் செய்த போலீசார், இது தெடார்பாக வெங்கடேசனை கைது செய்தனர்.

Next Story