சிறுமியிடம் நகை பறிக்க முயன்ற இளம்பெண் கைது


சிறுமியிடம் நகை பறிக்க முயன்ற  இளம்பெண் கைது
x
தினத்தந்தி 11 Dec 2021 11:16 PM IST (Updated: 11 Dec 2021 11:16 PM IST)
t-max-icont-min-icon

மார்த்தாண்டம் பஸ் நிறுத்தத்தில் சிறுமியிடம் நகை பறிக்க முயன்ற இளம்பெண்ணை போலீசார் கைது செய்தனர்.

குழித்துறை, 
மார்த்தாண்டம் பஸ் நிறுத்தத்தில் சிறுமியிடம் நகை பறிக்க முயன்ற இளம்பெண்ணை போலீசார் கைது செய்தனர். 
இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:- 
ஆஸ்பத்திரிக்கு சென்றவர்கள்
குழித்துறை அருகே உள்ள அதங்கோடு பகுதியை சேர்ந்தவர் செல்வராஜ். இவரது மனைவி மேரி புஷ்பம் (வயது52). இவர் நேற்று காலை தனது மகள் மற்றும் பேத்தியுடன் மார்த்தாண்டத்தில் உள்ள ஆஸ்பத்திரிக்கு மருந்து வாங்க சென்றார். மருந்து வாங்கிய பின்பு  வீட்டுக்கு செல்வதற்காக மார்த்தாண்டம் காந்தி மைதானம் பஸ் நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்தனர். 
அவர்கள் வீட்டிற்கு செல்ல வேண்டிய பஸ் வந்ததும் மேரி புஷ்பமும், அவரது மகளும், பேத்தியும் ஏறினார்கள்.
நகை பறிக்க முயற்சி
அப்போது கூட்ட நெரிசலை பயன்படுத்தி மேரி புஷ்பத்தின் பேத்தியின் காலில் கிடந்த 6 கிராம் தங்க கொலுசை ஒரு இளம்பெண் பறிக்க முயன்றார். அதை மேரி புஷ்பம் பார்த்துவிட்டார். உடனே அவர் சத்தம் போட்டார். அதற்குள் அந்த இளம்பெண் கூட்ட நெரிசலில் நைசாக நழுவி சென்று விட்டார். அவரை அந்த பகுதியில் தேடியும் கண்டு பிடிக்க முடியவில்லை.
அதன்பிறகு அவர்கள் வேறு ஒரு பஸ்சில் ஏறி வீட்டுக்கு சென்று கொண்டிருந்தனர். அந்த பஸ் சிறிது தூரம் சென்ற போது சிறுமியின் கொலுசை பறிக்க முயன்ற இளம்பெண் நிற்பதை மேரி புஷ்பம் பார்த்தார். உடனடியாக அவர் தனது மகள், பேத்தியுடன் பஸ்சில் இருந்து கீழே இறங்கினார். 
இளம்பெண் கைது
பின்னர் அவர்கள் அந்த பகுதியில் நின்ற பொதுமக்களின் உதவியுடன் அந்த இளம்பெண்ணை சுற்றி வளைத்து பிடித்து மார்த்தாண்டம் போலீசில் ஒப்படைத்தனர்.
போலீசார் நடத்திய விசாரணையில் அவர் நாகர்கோவில் செட்டிகுளத்தை சேர்ந்த சுரேஷ் என்பவரது மனைவி தேவி (24) என்பது தெரியவந்தது. மேலும், சிறுமியின் காலில் கிடந்த தங்க கொலுசை பறிக்க முயன்றதையும் ஒப்புக்கொண்டார். இதுகுறித்து சப்-இன்ஸ்பெக்டர் சுரேஷ் வழக்கு பதிவு செய்து தேவியை கைது செய்தார்.

Next Story