தொழிலாளி போக்சோ சட்டத்தில் கைது


தொழிலாளி போக்சோ சட்டத்தில் கைது
x
தினத்தந்தி 11 Dec 2021 11:20 PM IST (Updated: 11 Dec 2021 11:20 PM IST)
t-max-icont-min-icon

கொள்ளிடம் அருகே கல்லூரி மாணவியை தாயாக்கிய தொழிலாளியை போக்சோ சட்டத்தில் போலீசார்கைது செய்தனர்.

கொள்ளிடம்:
கொள்ளிடம் அருகே கல்லூரி மாணவியை தாயாக்கிய தொழிலாளியை  போக்சோ சட்டத்தில் போலீசார்கைது செய்தனர்.
ஆண் குழந்தை
கொள்ளிடம் அருகே திருமயிலாடி கிராமத்தில் உள்ள மூங்கில் காட்டில் பிறந்து சில மணி நேரங்களே ஆன ஒரு ஆண் குழந்தை நேற்றுமுன்தினம் கிடந்தது. இதனை பார்த்த திருமயிலாடி கிராமம் தெற்கு தெருவை சேர்ந்த மனோஜ் என்பவர்  குழந்தையை மீட்டு சீர்காழி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தார். அங்கு குழந்தைக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 
இதுகுறித்து திருமயிலாடி கிராம நிர்வாக அலுவலர் சீனிவாசன் கொள்ளிடம் போலீசில் கொடுத்த புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் அமுதாராணி மற்றும் போலீசார் நேற்றுமுன்தினம் சீர்காழி அரசு ஆஸ்பத்திரிக்கு நேரில் சென்று குழந்தையை பார்வையிட்டு விசாரணை நடத்தினர். விசாரணையில் சீர்காழியில் உள்ள ஒரு கல்லூரியில் படித்து வரும் மாணவி ஒருவருக்கு பிறந்த குழந்தை என்பதும், குழந்தை பிறந்தவுடன் யாருக்கும் தெரியாமல் திருமயிலாடி பகுதியில் உள்ள மூங்கில் காட்டிற்கு எடுத்துச்சென்று குழந்தையை அனாதையாக போட்டுவிட்டு வந்துள்ளார் என்பதும் தெரியவந்தது.
தொழிலாளி கைது
இதைத்தொடர்ந்து இந்த குழந்தையின் தந்தை யார்? என்பது குறித்து மாணவி அளித்த தகவலின் பேரில் போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டதில் குழந்தைக்கு தந்தை திருமயிலாடி கிராமத்தை சேர்ந்த தேவதாஸ் மகன் காளிதாஸ் (வயது 31) என்பதும், தொழிலாளியான இவருக்கு திருமணமாகி 7 மாதங்கள் ஆகிறது என்பதும் தெரியவந்தது. 
மாணவிக்கு தற்போது 18 வயது பூர்த்தி அடைந்த நிலையில், 17 வயதில் கர்ப்பமானதால் கொள்ளிடம் இன்ஸ்பெக்டர் அமுதாராணி மற்றும் போலீசார் காளிதாசை போக்சோ சட்டத்தின் கீழ் நேற்று கைது செய்தனர்.

Next Story