மக்கள் நீதிமன்றத்தின் மூலம் ரூ.18 கோடி இழப்பீடு வழங்க உத்தரவு
வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் மக்கள் நீதிமன்றத்தின் மூலம் ரூ.18 கோடி இழப்பீடு வழங்க உத்தரவிடப்பட்டது.
வேலூர்
வேலூர் சத்துவாச்சாரியில் உள்ள ஒருங்கிணைந்த கோர்ட்டு வளாகத்தில் மக்கள் நீதிமன்றம் நேற்று நடந்தது. மாவட்ட முதன்மை நீதிபதி வசந்தலீலா தலைமை தாங்கினார்.
முதலாவது கூடுதல் மாவட்ட நீதிபதி சாந்தி, நிரந்தர மக்கள் நீதிமன்ற நீதிபதி அருணாசலம், தொழிலாளர் நீதிமன்ற நீதிபதி மணிவண்ணன், தலைமை நீதித்துறை நடுவர் நீதிமன்ற நீதிபதி மகேஸ்வரி பானுரேகா, சார்பு நீதிபதி ஸ்ரீராம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
பல்வேறு வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு சமரசம் மூலம் தீர்வு காணப்பட்டன. மேலும் பயனாளிகளுக்கு இழப்பீட்டுக்கான ஆணையும் வழங்கப்பட்டன.
இதேபோல வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் 11 இடங்களில் மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது.
மொத்தம் 11 ஆயிரத்து 483 வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு 2,887 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது.
இதன் மூலம் ரூ.18 கோடியே 42 லட்சத்து 83 ஆயிரத்து 441-க்கு இழப்பீட்டுக்கான ஆணைகள் வழங்கப்பட்டன.
Related Tags :
Next Story