நீர்நிலை புறம்போக்கை ஆக்கிரமித்து கட்டிய 2 கட்டிடங்கள் இடித்து அகற்றம்
சோளிங்கர் அருகே நீர்நிலை புறம்போக்கை ஆக்கிரமித்து கட்டிய 2 கட்டிடங்கள் இடித்து அகற்றப்பட்டது.
சோளிங்கர்
சோளிங்கர் அருகே நீர்நிலை புறம்போக்கை ஆக்கிரமித்து கட்டிய 2 கட்டிடங்கள் இடித்து அகற்றப்பட்டது.
ஆக்கிரமிப்பு
ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கரை அடுத்த பரவத்தூர் ஊராட்சிக்கு உட்பட்ட சின்னபரவத்தூர் அரசு நடுநிலைப் பள்ளி அருகில் அரசுக்கு சொந்தமான நீர்நிலை புறம்போக்கு பகுதியை சிலர் ஆக்கிரமித்து வீடுகளை கட்டியிருந்தனர். இதுகுறித்து வருவாய்த்துறை அதிகாரிகளுக்கு புகார் சென்றது.
அதன்பேரில் சோளிங்கர் தாசில்தார் வெற்றிகுமார் தலைமையில் வருவாய்த்துறையினரும், சோளிங்கர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவக்குமார் தலைமையில் போலீசாரும் சம்பந்தப்பட்ட இடத்துக்கு நேரில் சென்றனர்.
பொக்லைன் மூலம் இடித்து அகற்றம்
அங்கு அரசுக்கு சொந்தமான நீர்நிலை புறம்போக்கு இடத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்டு இருந்த 2 வீடுகளை பொக்லைன் எந்்திரத்தின் உதவியோடு இடித்து அகற்றினர்.
அப்போது வருவாய் ஆய்வாளர் சீனிவாசன், கிராம நிர்வாக அலுவலர் சிவசங்கரி, ஊராட்சி மன்ற தலைவர் தனம்மாள் மணிகண்டன், ஒன்றிய கவுன்சிலர் ராமன், போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஏழுமலை மற்றும் போலீசார் உடனிருந்தனர்.
அப்போது தாசில்தார் கூறுகையில், இனிவரும் காலங்களில் நீர்நிலை பகுதியை ஆக்கிரமிப்பு செய்தாலோ, அங்குக் கட்டிடங்களை கட்டினாலோ சம்பந்தப்பட்டவர்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும், என எச்சரிக்கை விடுத்தார்.
Related Tags :
Next Story