தேசிய மக்கள் நீதிமன்றம் மூலம் 399 வழக்குகளுக்கு தீர்வு


தேசிய மக்கள் நீதிமன்றம் மூலம் 399 வழக்குகளுக்கு தீர்வு
x
தினத்தந்தி 11 Dec 2021 11:28 PM IST (Updated: 12 Dec 2021 12:17 AM IST)
t-max-icont-min-icon

சிவகங்கை மாவட்டத்தில் தேசிய மக்கள் நீதிமன்றம் மூலம் 399 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. இதில் ரூ.3 கோடியே 17 லட்சம் இழப்பீடு கிடைத்தது.

சிவகங்கை,

சிவகங்கை மாவட்டத்தில் தேசிய மக்கள் நீதிமன்றம் மூலம் 399 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. இதில் ரூ.3 கோடியே 17 லட்சம் இழப்பீடு கிடைத்தது.

மக்கள் நீதிமன்றம்

தேசிய சட்டப்பணிகள் ஆணையத்தின் உத்தரவுப்படியும் மற்றும் தமிழ்நாடு மாநில சட்டப்பணிகள் ஆணையத்தின் வழிகாட்டுதலின் படியும், சிவகங்கை மாவட்டத்தில் 11 இடங்களில் மக்கள் நீதிமன்றங்கள் நடைபெற்றது. மாவட்ட சட்ட பணிகள் ஆணைக்குழு தலைவர் மற்றும் முதன்மை மாவட்ட நீதிபதி சுமதிசாய் பிரியா தலைமையில் நடந்தது. .
இந்த தேசிய மக்கள் நீதிமன்றங்களில் மொத்தம் 61 குற்றவியல் வழக்குகளும், 59 காசோலை மோசடி வழக்குகளும், 65 வங்கிக்கடன் வழக்குகளும், 27 மோட்டார் வாகன விபத்து நஷ்ட ஈடு வழக்குகளும், 19 குடும்பப்பிரச்சினை சம்பந்தப்பட்ட வழக்குகளும், 80 சிவில் சம்பந்தப்பட்ட வழக்குகளும் என மொத்தம் 411 வழக்குகள் பரிசீலனைக்கு எடுக்கப்பட்டு 240 வழக்குகள் சமரசமாக தீர்க்கப்பட்டது.
இதில் ரூ.2 கோடியே 5 லட்சத்து 73ஆயிரத்து 481-ஐ வழக்குதாரர்களுக்கு கிடைக்குமாறு முடிக்கப்பட்டது. அதுபோல் வங்கி கடன் நிலுவை சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படாத வழக்குகளில் 3,410 வழக்குகள் பரிசீலனைக்கு எடுக்கப்பட்டு 159 வழக்குக்கு தீர்வு காணப்பட்டது. ரூ.1 கோடியே, 11 லட்சத்து 94 ஆயிரத்து, 250 வரை வங்கிகளுக்கு தீர்வானது.மாவட்ட அளவிலான தேசிய மக்கள் நீதிமன்றங்கள் மூலம் 399 வழக்குகள் முடிக்கப்பட்டு ரூ.3கோடியே, 17 லட்சத்து 67ஆயிரத்து 731 பயனாளிகளுக்கு கிடைத்தது.

Next Story