படகு போக்குவரத்து தாமதம்
படகு போக்குவரத்து தாமதம்
கன்னியாகுமரி,
சர்வதேச சுற்றுலா தலமான கன்னியாகுமரிக்கு தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். அவ்வாறு வரும் சுற்றுலா பயணிகள் முக்கடல் சங்கமத்தில் புனித நீராடி, பகவதி அம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்வார்கள். பின்னர் கடலின் நடுவே அமைந்துள்ள விவேகானந்தர் நினைவு மண்டபம், திருவள்ளுவர் சிலை ஆகியவற்றை படகில் சென்று பார்த்துவிட்டு திரும்புவது வழக்கம். இதற்காக பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகம் சார்பில் காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை படகுகள் இயக்கப்படுகிறது.
கன்னியாகுமரி கடலில் நேற்று காலை முதல் பலத்த காற்று வீசியது. அத்துடன் கடலின் நீர் மட்டம் தாழ்ந்து காணப்பட்டது. இதனால், காலை 8 மணிக்கு தொடங்க வேண்டிய படகு போக்குவரத்து தொடங்கவில்லை. காலையில் விவேகானந்தர் மண்டபத்திற்கு செல்ல காத்திருந்த சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர்.
மதியம் 1 மணிக்கு பின்பு காற்றின் வேகம் குறைந்து கடலின் நீர்மட்டம் சீரானது. இதையடுத்து படகு போக்குவரத்து தொடங்கியது. சுற்றுலா பயணிகள் நீண்ட நேரம் காத்திருந்து படகில் பயணம் செய்து விவேகானந்தர் மண்டபத்திற்கு சென்று கண்டுகளித்தனர்.
Related Tags :
Next Story