ஜலகண்டேஸ்வரர் கோவிலில் மீண்டும் தண்ணீர் தேங்குவதால் பக்தர்கள் அவதி
வேலூர் ஜலகண்டேஸ்வரர் கோவிலில் மீண்டும் தண்ணீர் தேங்குவதால் பக்தர்கள் அவதிப்பட்டனர்.
வேலூர்
வேலூர் கோட்டையில் உள்ள ஜலகண்டேஸ்வரர் கோவிலில் தண்ணீர் தேங்கி காணப்பட்டது. கருவறை உள்ளேயும் தண்ணீர் சென்றதால் கடந்த மாதம் 30-ந்தேதி முதல் பக்தர்கள் கோவிலுக்குள் செல்ல அனுமதிக்கப்படவில்லை. உற்சவர் சாமிகள் வெளியே வைக்கப்பட்டது. தொடர்ந்து கோவிலில் தண்ணீர் வெளியேற்றும் பணி நடைபெற்றது.
இந்த நிலையில் நேற்று காலையில் தண்ணீர் வற்றியதால் பக்தர்களுக்கு கோவிலுக்குள் செல்ல அனுமதி அளிக்கப்பட்டது. இதனால் பலர் கோவிலுக்குள் சென்று சாமி தரிசனம் செய்தனர்.
இந்த நிலையில் பகலில் மீண்டும் கோவிலுக்குள் தண்ணீர் வரத்தொடங்கியது. அம்மன் சன்னதி பகுதியில் தண்ணீர் தேங்கியது. அதில் பக்தர்கள் நடந்து சென்று தரிசனம் செய்தனர்.
கோவில் அபிஷேக நீர் வெளியேறும் பகுதியில் இருந்து தண்ணீர் கோவிலுக்குள் வந்து கொண்டே இருப்பதாக நிர்வாகிகள் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story