குற்றாலநாதர் சுவாமி கோவிலில் திருவாதிரை திருவிழா கொடியேற்றம்
குற்றாலம் குற்றாலநாதர் சுவாமி கோவிலில் திருவாதிரை திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.
தென்காசி:
குற்றாலம் குற்றாலநாதர் சுவாமி கோவிலில் திருவாதிரை திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.
குற்றாலநாதர் சுவாமி கோவில்
குற்றாலம் குற்றாலநாதர் சுவாமி கோவிலில் ஆண்டுதோறும் திருவாதிரை திருவிழா நடைபெறும். அதுபோல் இந்த ஆண்டுக்கான திருவிழா நேற்று காலை தொடங்கியது. இதையொட்டி காலை 5.20 மணிக்கு மேல் 6.20 மணிக்குள் கொடியேற்றம் நடைபெற்றது. தொடர்ந்து கொடிமரத்திற்கு சிறப்பு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
திருவிழா வருகிற 20-ந் தேதி வரை நடைபெறுகிறது. தினமும் காலை 9.30 மணிக்கு மேல், இரவு 7 மணிக்கு மேலும் நடராஜ பெருமானுக்கு தாண்டவ தீபாராதனை நடைபெறுகிறது.
தேரோட்டம்
வருகிற 15-ந் தேதி காலை 9 மணிக்கு மேல் தேரோட்டம் நடக்கிறது. தொடர்ந்து 18-ந் தேதி காலை 10 மணிக்கு மேல் சித்திர சபையில் பச்சை சாத்தி தாண்டவ தீபாராதனையும், 20-ந் தேதி அதிகாலை 4 மணிக்கு சித்திர சபையில் ஆருத்ரா தரிசன தாண்டவ தீபாராதனையும் நடக்கிறது. அன்று காலை 5 மணிக்கு மேல் திரிகூட மண்டபத்தில் ஆருத்ரா தரிசன தாண்டவ தீபாராதனையும் நடக்கிறது.
விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் தக்கார் சங்கர், உதவி ஆணையர் கண்ணதாசன் ஆகியோர் செய்து வருகிறார்கள்.
சங்கரன்கோவில்
சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி கோவிலில் திருவாதிரை திருவிழா 10 நாட்கள் நடைபெறுவது வழக்கம். விழா நாட்களில் சுவாமி, அம்பாள் வீதி உலா நடைபெறுவது வழக்கம். கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் வருகிற டிசம்பர் 15-ந் தேதி வரை தமிழக அரசு வீதி உலாவிற்கு தடை விதித்துள்ளது. இதனால் சுவாமி - அம்பாள் வீதி உலா கோவிலின் பிரகாரத்தில் நடைபெற உள்ளது. இந்த ஆண்டிற்கான திருவாதிரை திருவிழா நேற்று காலை 5.35 மணிக்கு கொடியேற்றுடன் தொடங்கியது.
இதனை முன்னிட்டு சங்கரலிங்க சுவாமி சன்னதி முன்பு அமைந்துள்ள கொடிமரத்திற்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனைகள் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
சிகர நிகழ்ச்சியான திருவாதிரை திருவிழா வருகிற 20-ந் தேதி நடைபெற உள்ளது.
Related Tags :
Next Story