நெல்லையில் தேசிய மக்கள் நீதிமன்றம்


நெல்லையில் தேசிய மக்கள் நீதிமன்றம்
x
தினத்தந்தி 12 Dec 2021 1:27 AM IST (Updated: 12 Dec 2021 1:27 AM IST)
t-max-icont-min-icon

நெல்லையில் தேசிய மக்கள் நீதிமன்றம் நேற்று நடந்தது.

நெல்லை:
நெல்லையில் தேசிய மக்கள் நீதிமன்றம் நேற்று நடந்தது.

மக்கள் நீதிமன்றம்

நெல்லை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவில் மூலம் நெல்லை மாவட்டத்தில் உள்ள 9 தாலுகா கோர்ட்டு மற்றும் நெல்லை மாவட்ட கோர்ட்டு வளாகம் ஆகியவற்றில் நேற்று தேசிய மக்கள் நீதிமன்றம் நடந்தது. இதில் 17 அமர்வுகளுடன் இந்த கோர்ட்டு கொரோனா பரவலை தடுப்பதற்கான நடவடிக்கைகளான சமூக இடைவெளியுடன் நடத்தப்பட்டது.

நெல்லை மாவட்ட முதன்மை     நீதிபதி  நசீர் அகமது தொடங்கி வைத்தார். இதில் நிரந்தர மக்கள் நீதிமன்ற நீதிபதி சமீனா, 4-வது கூடுதல் மாவட்ட நீதிபதி தீபா, குடும்ப நல நீதிபதி குமரேசன், மகளிர் நீதிமன்ற நீதிபதி விஜயகுமார், தலைமை குற்றவியல் நீதிமன்ற நீதிபதி அமிர்தவேலு, கூடுதல் சார்பு நீதிபதி இசக்கியப்பன், மோட்டார் வாகன விபத்து இழப்பீடு சிறப்பு நீதிமன்ற நீதிபதி பிஸ்மிதா, 1-வது கூடுதல் மாவட்ட உரிமையியல் நீதிபதி சுப்பையா, மாஜூஸ்திரேட்டுகள் அருண்குமார், ராஜேஷ்குமார், கடற்கரைசெல்வம், விஜயலட்சுமி, ஜெய்கணேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

4,153 வழக்குகளுக்கு தீர்வு

இந்த தேசிய மக்கள் நீதிமன்றத்தில் நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள மோட்டார் வாகன விபத்து வழக்குகள், குடும்ப நல வழக்குகள், உரிமையியல் வழக்குகள், காசோலை மோசடி வழக்குகள், சமரசமாக முடிக்கக்கூடிய குற்ற வழக்குகள் உள்பட மொத்தம் 6,032 வழக்குகள் எடுத்துக்கொள்ளப்பட்டு, 4012 வழக்குகள் ரூ.17 கோடியே 53 லட்சத்து 33 ஆயிரத்து 891-க்கு தீர்வு காணப்பட்டது. 

மேலும் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படாத தாவாக்களாகிய வங்கி கடன் வழக்குகள் மொத்தம் 736 வழக்குகள் எடுத்துக்கொள்ளப்பட்டு இதில் 141 வழக்குகள் ரூ.1 கோடியே 35 லட்சத்து 70 ஆயிரத்து 100 சமரச தொகைக்கு முடிக்கப்பட்டது.

Next Story