கடமலைக்குண்டு அருகே இரட்டை மாட்டு வண்டி பந்தயம்
கடமலைக்குண்டு அருகே இரட்டை மாட்டு வண்டி பந்தயம் நடந்தது.
கடமலைக்குண்டு:
கடமலைக்குண்டு அருகே உள்ள குமணன்தொழுவில் தி.மு.க. மாநில இளைஞரணி செயலாளர் உதயநிதிஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு இரட்டை மாட்டுவண்டி பந்தயம் நடைபெற்றது.இதற்கு தேனி தெற்கு மாவட்ட தி.மு.க பொறுப்பாளரும், எம்.எல்.ஏ.வுமான கம்பம் ராமகிருஷ்ணன், ஆண்டிப்பட்டி எம்.எல்.ஏ. மகாராஜன் ஆகியோர் தலைமை தாங்கி போட்டிகளை தொடங்கி வைத்தனர். நடுமாடு, கரிச்சான், தேன்சிட்டு, இளஞ்சிட்டு, பூஞ்சிட்டு ஆகிய 5 பிரிவுகளின் கீழ் போட்டிகள் நடைபெற்றது. ஒவ்வொரு சுற்றிலும் வெற்றி பெற்ற முதல் 4 பேருக்கு பரிசு மற்றும் கோப்பைகள் வழங்கப்பட்டது.
மாட்டு வண்டி பந்தயத்தையொட்டி கடமலைக்குண்டு முதல் குமணன்தொழு வரை போக்குவரத்து தடை செய்யப்பட்டு வாகனங்கள் மாற்று பாதைகள் வழியாக திருப்பி விடப்பட்டது. போட்டிக்கான ஏற்பாடுகளை கடமலை-மயிலை ஒன்றிய தி.மு.க. இளைஞரணி நிர்வாகிகள் செய்திருந்தனர்.
Related Tags :
Next Story