மோட்டார்சைக்கிளில் சென்றவரிடம் ‘லிப்ட்’ கேட்பதுபோல் நடித்து செல்போன் பறித்த வாலிபர்


மோட்டார்சைக்கிளில் சென்றவரிடம் ‘லிப்ட்’ கேட்பதுபோல் நடித்து செல்போன் பறித்த வாலிபர்
x
தினத்தந்தி 12 Dec 2021 5:44 PM IST (Updated: 12 Dec 2021 5:44 PM IST)
t-max-icont-min-icon

மோட்டார்சைக்கிளில் சென்றவரிடம் ‘லிப்ட்’ கேட்பதுபோல் நடித்து செல்போன் பறித்த வாலிபரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

சென்னையை அடுத்த முகலிவாக்கம் மதனந்தபுரத்தை சேர்ந்தவர் ஆனந்த் (வயது 49). இவர், நந்தம்பாக்கத்தில் இருந்து மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு சென்று கொண்டு இருந்தார். நந்தம்பாக்கம் அடையாறு ஆற்றங்கரையோர சாலையில் சென்றபோது, சாலையோரம் நின்றிருந்த வாலிபர் ஒருவர் இவரிடம் ‘லிப்ட்’ கேட்பது போல கை காட்டினார்.

அதை நம்பி ஆனந்தும் மோட்டார்சைக்கிளை நிறுத்தினார். உடனே அந்த வாலிபர் திடீரென உருட்டுக்கட்டையால் ஆனந்தை தாக்கி அவரிடம் இருந்த செல்போன்கள், ஒரு பவுன் தங்க மோதிரம் ஆகியவற்றை பறித்துச்சென்றுவிட்டார்.

இதுகுறித்து நந்தம்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து ‘லிப்ட்’ கேட்பதுபோல் நடித்து வழிப்பறியில் ஈடுபட்ட பழைய குற்றவாளியான அய்யப்பன்தாங்கலை சேர்ந்த தங்கராஜ் (30) என்பவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.


Next Story