உடன்குடி அருகே கருமேனி ஆற்று தடுப்பணையில் தண்ணீர் தேங்கியது
உடன்குடி அருகே கருமேனி ஆற்று தடுப்பணையில் தண்ணீர் தேங்கியதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்
உடன்குடி:
உடன்குடி அருகே உள்ள மணி நகரிலிருந்து உதிரமாடன்குடியிருப்பு செல்லும் கருமேனி ஆற்றில் ஒருதடுப்பணை உள்ளது. இந்த தடுப்பணையில் தண்ணீர் தேங்கி குளம்போல கிடக்கிறது. இதனால் விவசாயிகள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இதை சுற்றியுள்ள பல ஏக்கர் விவசாய நிலங்களில் உள்ள உப்பு கலந்த கசப்பு நீரெல்லாம் நல்ல தண்ணீராக மாறி வருவதாகவும், அதனால் இப்பகுதியில் பயிரிடப்பட்டுள்ள தென்னை, பனை, முருங்கை, கடலை, மற்றும் ஏராளமான விவசாய பயிர்கள் நன்றாக வளர்வதாக இப்பகுதி விவசாயிகள் கூறுகின்றனர். மேலும் புதியதாக பல்வேறு விவசாயங்களை மேற்கொள்ள விவசாயிகளுக்கு ஆர்வம் ஏற்பட்டு இருப்பதாகவும், அதனால் கருமேனி ஆற்றில் கூடுதலாக தடுப்பணைகளை ஆங்காங்கே கட்டி வைத்து, இதை போல தண்ணீர் தேக்கி வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இப்பகுதியில் உள்ள விவசாயிகள் கோரிக்கை விடுத்துவருகின்றனர்.
Related Tags :
Next Story