தமிழகத்தில் 4¼ லட்சம் தடுப்பூசிகள் கையிருப்பு: அமைச்சர் மா.சுப்பிரமணியன்
தமிழகத்தில் தடுப்பூசியை பொறுத்தவரை 4 லட்சத்து 26 ஆயிரத்து 925 தடுப்பூசிகள் கையிருப்பில் இருக்கிறது என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார்.
திருமுல்லைவாயில் அடுத்த அயப்பாக்கம் ஊராட்சியில் பழைய போலீஸ் நிலையம் அருகே நேற்று காலை மெகா தடுப்பூசி முகாம் நடைபெற்றது. இந்த முகாமில் தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கலந்துகொண்டு ஆய்வு செய்தார். பின்னர் நிருபர்களிடம் அவர் கூறியதாவது:-
திருவள்ளூர் மாவட்டத்தில் இதுவரை 13 தடுப்பூசி மெகா முகாம்கள் நடைபெற்றுள்ளது. இந்த முகாம்களில் மூலம் இதுவரை 8 லட்சத்து 95 ஆயிரத்து 940 பேர் தடுப்பூசி செலுத்தி உள்ளனர்.
அந்த வகையில் இன்று(அதாவது நேற்று) 14-வது தடுப்பூசி முகாம் ஏறத்தாழ 900 இடங்களில் நடைபெற்றது. தமிழகத்தில் தடுப்பூசியை பொறுத்தவரை 4 லட்சத்து 26 ஆயிரத்து 925 தடுப்பூசிகள் கையிருப்பில் இருக்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story