காபி பழங்கள் உதிர்வதால் விவசாயிகள் கவலை
காபி பழங்கள் உதிர்வதால் விவசாயிகள் கவலை
கூடலூர்
கூடலூர் பகுதியில் தொடர்ந்து பெய்த மழை காரணமாக காபி பழங்கள் உதிர்வதால் விவசாயிகள் கவலை அடைந்து உள்ளனர்.
தொடர் மழை
நீலகிரி மாவட்டம் கூடலூர் பகுதியில் ஆண்டுதோறும் தென்மேற்கு மற்றும் வடகிழக்கு பருவமழை ஜூன் மாதம் தொடங்கி நவம்பர் மாதம் பெய்வது வழக்கம். இதனால் பச்சைத் தேயிலைக்கு இணையாக குறுமிளகு, காபி, ஏலக்காய், இஞ்சி உள்ளிட்ட பணப்பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் நடப் ஆண்டில் வடகிழக்கு பருவமழை தாமதமானதால் கடந்த வாரம் வரை கூடலூர் பகுதியில் மழை பெய்தது. இதனால் பச்சை தேயிலை விளைச்சல் பாதிக்கப்பட்டது. அதுபோன்று அறுவடைக்கு தயாரான நெற்கதிர்களும் நாசம் அடைந்தது. இதனால் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.
காபி பழங்கள் உதிர்ந்தன
இந்த நிலையில் நவம்பர் தொடங்கி ஜனவரி மாதம் மழை காபி பழங்கள் அறுவடை சீசன் நடைபெறும். இந்த நிலையில் தொடர் மழையால் செடிகளில் விளைந்த காபி பழங்கள் உதிர்ந்து வீணாகி வருகிறது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது:-
கூடலூர் பகுதியில் அரபிக்கா, ரொபஸ்டா என 2 வகை காபி விளைகிறது. பருவமழை காலத்தில் காபி காய்க்கிறது. நவம்பர் மாதம் முதல் ஜனவரி வரை காப்பி பழங்கள் அறுவடை செய்யப்பட்டு விதைகள் பதப்படுத்தப் படுகிறது.
நடப்பாண்டு கடந்த மாதம் முழுவதும் தொடர்ந்து பலத்த மழை பெய்ததால் காபி பழங்கள் உதிர்ந்து வீணாகிவிட்டது. இதனால் காபி விளைச்சல் பாதிக்கப்பட்டு உள்ளதால் வருவாய் இழப்பு ஏற்பட்டு இருக்கிறது.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
Related Tags :
Next Story