ஈளாடா தடுப்பணையில் இருந்து வெளியேறும் தண்ணீர்


ஈளாடா தடுப்பணையில் இருந்து வெளியேறும் தண்ணீர்
x
தினத்தந்தி 12 Dec 2021 8:31 PM IST (Updated: 12 Dec 2021 8:31 PM IST)
t-max-icont-min-icon

ஈளாடா தடுப்பணையில் இருந்து வெளியேறும் தண்ணீர்

கோத்தகிரி

தொடர்மழை காரணமாக ஈளாடா தடுப்பணைநிரம்பியதால் வீணாக  தண்ணீர் வெளியேறி வருகிறது. எனவே அதனை தடுக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர். 

ஈளாடா தடுப்பணை 

கோத்தகிரி அருகே உள்ள கோடநாடு ஈளாடா கிராமத்தில் 90 மீட்டர் நீளமும், 60 மீட்டர் அகலமும், 12 அடி ஆழம் கொண்ட  தடுப்பணை உள்ளது. இந்த தடுப்பணையில் இருந்து கோத்தகிரியில் உள்ள 3 ஆயிரம் வீடுகளுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. 

இது மட்டுமின்றி தடுப்பணை தண்ணீரை நம்பி அருகே உள்ள கிராமங் களை சேர்ந்த நூற்றுக்கணக்கான ஏக்கரில் விவசாயிகள் மலை காய்கறிகளை சாகுபடி செய்து வருகிறார்கள். 

நிரம்பி வழிகிறது 

இந்த நிலையில் கோடநாடு மற்றும் அதைச்சுற்றி உள்ள பகுதிகளில் தொடர்ந்து மழை காரணமாக ஈளாடா தடுப்பணைக்கு தண்ணீர் வரத்து அதிகரித்தது. இதன் காரணமாக தடுப்பணை முழு கொள்ளளவை எட்டி நிரம்பி வழிந்து வருகிறது. 

இதையடுத்து தடுப்பணையில் இருந்து உபரிநீர் வெளியேறி அருவி போன்று கொட்டுகிறது. இந்த உபரிநீர் அனைத்தும் பொதுமக்கள் யாருக்கும் உப யோகம் இல்லாமல் வீணாக சென்று வருகிறது. எனவே இந்த தண்ணீரை சேமிக்க புதிய திட்டத்தை கொண்டு வர வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர். 

இது குறித்து மேலும் அந்தப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கூறியதாவது:-

வீணாகுவதை தடுக்க வேண்டும் 

கோத்தகிரியின் முக்கிய குடிநீர் ஆதாரமாக இருக்கும் ஈளாடா தடுப்பணை நிரம்பி உபரிநீர் அதிகளவில் வெளியே சென்று வருகிறது. கோத்தகிரி மக்களின் குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு காண ரூ.10½ கோடியில் அளக்கரை கூட்டுக்குடிநீர் திட்டம் கெர்ணடு வரப்பட்டாலும் ஈளாடா தடுப்பணையில் இருந்து வினியோகிக்கப்படும் குடிநீரின் அளவுதான் அதிகம். 

தற்போது வெளியேறும் தண்ணீர் வீணாகதான் செல்கிறது. இதை சேமிக்க புதிதாக தடுப்பணை கட்டி குடிநீர் திட்டத்தை கொண்டு வந்தால் கோத்தகிரி மக்களுக்கு தட்டுப்பாடு இல்லாமல் குடிநீர் கிடைப்பதுடன் நிலத்தடி நீர்மட்டமும் உயரும். எனவே தண்ணீர் வீணாகுவதை தடுக்க புதிய திட்டத்தை கொண்டு வர வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள். 


Next Story