சேத்தியாத்தோப்பில் பா.ஜ.க.வினர் வாயில் கருப்புத்துணி கட்டி போராட்டம்
சேத்தியாத்தோப்பில் பா.ஜ.க.வினர் வாயில் கருப்புத்துணி கட்டி போராட்டத்தில் ஈடுபட்டனா்.
சேத்தியாதோப்பு,
தமிழக அரசை விமர்சித்து சமூக வலைத்தளத்தில் கருத்து பதிவிட்டதாக கூறி பா.ஜ.க. நிர்வாகிகள் போலீசாரால் கைது செய்யப்பட்டு வருவதாகவும், இதை கண்டிக்கும் வகையில் பா.ஜ.க.வினர் நேற்று தமிழகம் முழுவதும் நேற்று மவுன போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அந்த வகையில் கடலூர் மாவட்ட பா.ஜ.க. சார்பில் தி.மு.க.வை கண்டித்து வாயில் கருப்பு துணி கட்டி மவுன போராட்டம் நடைபெற்றது. இதற்கு மாவட்ட தலைவர் கே.பி.டி. இளஞ்செழியன் தலைமை தாங்கினார். இதில் 50-க்கும் மேற்பட்டவர்கள் வாயில் கருப்பு துணி கட்டி பங்கேற்றனர்.
Related Tags :
Next Story