திருச்செங்கோடு அருகே 7 ஆயிரம் லிட்டர் கலப்பட டீசல் லாரியுடன் பறிமுதல்-2 பேர் கைது
திருச்செங்கோடு அருகே 7 ஆயிரம் லிட்டர் கலப்பட டீசலை லாரியுடன் பறிமுதல் செய்த குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத்துறை போலீசார் 2 பேரை கைது செய்தனர்.
எலச்சிபாளையம்:
7 ஆயிரம் லிட்டர் கலப்பட டீசல்
குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத்துறை போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலமுருகன் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் அகிலன், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சத்தியபிரபு, தலைமை காவலர் வெற்றிவேல் மற்றும் போலீசார் நேற்று அதிகாலை திருச்செங்கோடு நாராயணம்பாளையம் பகுதியில் திடீர் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது அந்த வழியாக வந்த டேங்கர் லாரியை நிறுத்தி போலீசார் சோதனை செய்தனர். இந்த சோதனையின் போது அந்த லாரியில் அதிக லாபத்திற்கு விற்பனை செய்ய சட்ட விரோதமாக 7 ஆயிரம் லிட்டர் கலப்பட டீசல் கொண்டு வந்தது தெரிந்தது.
2 பேர் கைது
இதையடுத்து 7 ஆயிரம் லிட்டர் கலப்பட டீசலுடன் லாரியை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் லாரி டிரைவர் சங்ககிரி பூச்சக்காடு பகுதியை சேர்ந்த முருகேசன் (வயது55), கலப்பட டீசல் உரிமையாளர் மோகன் (54) ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
கலப்பட டீசல் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் லாரி உரிமையாளர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story