2 கிராமங்களுக்கு செல்ல இரும்புப்பாலம் அமைப்பு
மோர்தானா அணை அருகே 2 கிராமங்களுக்கு செல்ல இரும்புப்பாலம் அமைக்கப்பட்டது.
குடியாத்தம்
மோர்தானா அணை அருகே கவுண்டன்யமகாநதி ஆற்றின் மறுகரையில் போடியப்பனூர், ராகிமானபல்லி கிராமங்கள் உள்ளன.
ஆற்றில் மழைவெள்ளம் ஓடுவதால் 2 கிராம மக்கள் மோர்தானா கிராமத்துக்கு வர சிரமப்பட்டனர். ஆற்றின் குறுக்கே தற்காலிக பாலம் அமைக்கக்கோரி கிராம மக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்தனர்.
வேலூர் மாவட்ட கலெக்டர் குமாரவேல் பாண்டியன் உத்தரவின்பேரில் ஊரக வளர்ச்சித்துறை திட்ட இயக்குனர் ஆர்த்தி, ஊரக வளர்ச்சித்துறை செயற்பொறியாளர் செந்தில்குமரன் ஆகியோர் மேற்பார்வையில் போடியப்பனூர், ராகிமானபல்லி கிராமங்களில் இருந்து மோர்தானா கிராமத்துக்கு வந்து செல்ல கவுண்டன்யமகாநதி ஆற்றின் குறுக்கே 118 மீட்டர் நீளத்துக்கும், ஒரு மீட்டர் அகலத்துக்கும் தற்காலிக இரும்புப்பாலம் அமைத்து, மக்கள் பயன்பாட்டுக்கு விடும் நிகழ்ச்சி நடந்தது.
நிகழ்ச்சியில் குடியாத்தம் ஒன்றியக்குழு தலைவர் என்.இ.சத்யானந்தம், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் யுவராஜ், சாந்தி, தி.மு.க. கிழக்கு ஒன்றிய பொறுப்பாளர் நத்தம்பிரதீஷ், ஒன்றிய பொறியாளர் குகன், தி.மு.க. தகவல் தொழில் நுட்ப அணி முருகானந்தம், ஒன்றிய குழு உறுப்பினர் கோதண்டம், மோர்தானா ஊராட்சி மன்ற தலைவர் பரந்தாமன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இரும்புப்பாலத்துக்கு பூஜைகள் செய்து, மக்கள் பயன்பாட்டுக்கு விடப்பட்டது. இதனால் மேற்கண்ட கிராம மக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.
Related Tags :
Next Story