ரெயில் மோதி தொழிலாளி சாவு
இரணியலில் ரெயில் மோதி தொழிலாளி இறந்தார். சகோதரர் கண் எதிரே இந்த பரிதாப சம்பவம் நடந்தது.
நாகர்கோவில்,
இரணியலில் ரெயில் மோதி தொழிலாளி இறந்தார். சகோதரர் கண் எதிரே இந்த பரிதாப சம்பவம் நடந்தது.
இதுபற்றிய விவரம் வருமாறு:-
தொழிலாளி
திக்கணங்கோடு தெங்கன்குழியை சேர்ந்தவர் லாசர் (வயது 75), தொழிலாளி. இவரும், இவருடைய சகோதரரும் கேரளாவில் வேலை செய்து வந்தனர்.
இந்த நிலையில் சொந்த ஊருக்கு செல்வதற்காக நேற்று முன்தினம் மாலை கேரளாவில் இருந்து ரெயில் மூலம் இருவரும் இரணியல் ரெயில் நிலையத்துக்கு வந்துள்ளனர்.
சாவு
அப்போது லாசர் சிறுநீர் கழிப்பதற்காக தண்டவாளத்தை கடக்க முயன்றார். அந்த சமயம் அந்த வழியாக வந்த எக்ஸ்பிரஸ் ரெயில் லாசர் மீது மோதியது. இதில் அவர் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இது அவருடைய சகோதரர் கண் முன் நடந்தது.
இதுபற்றி நாகர்கோவில் ரெயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சப்-இன்ஸ்பெக்டர்கள் விஜயகுமார், குமார்ராஜ் ஆகியோர் சம்பவ இடத்துக்கு சென்று தொழிலாளி லாசர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோனைக்காக ஆசாரிபள்ளம் அரசு அஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Related Tags :
Next Story