ராமநாதபுரம்,
ராமநாதபுரம் மாவட்ட பா.ஜனதா கட்சியின் தகவல் தொழில் நுட்ப பிரிவின் சார்பில் பா.ஜ.க.நிர்வாகிகளின் மீது போலீசார் பொய் வழக்கு போடுவதை கண்டித்து ராமநாதபுரம் அரண்மனை முன்பு வாயில் கருப்பு துணி கட்டி மவுன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. ஆர்ப்பாட்டத்துக்கு தகவல் தொழில் நுட்ப பிரிவு தலைவர் பரமேசுவரன் தலைமை தாங்கினார்.பா.ஜ.க.நகர் தலைவர் வீரபாகு, விஜய்பாபா ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் மாநில செய்தி தொடர்பாளர் சுப.நாகராஜன், மாநில செயலாளர்கள் சண்முகராஜா, முருகன், இளைஞரணி மாநில பொதுச்செயலாளர் ஆத்மா கார்த்திக், மாவட்ட பொதுச்செயலாளர் குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.