மூதாட்டியிடம் 2 பவுன் நகை திருட்டு


மூதாட்டியிடம் 2 பவுன் நகை திருட்டு
x
தினத்தந்தி 12 Dec 2021 5:46 PM GMT (Updated: 2021-12-12T23:16:18+05:30)

ராமநாதபுரம் அருகே மூதாட்டியிடம் 2 பவுன் நகை திருடப்பட்டது.

ராமநாதபுரம்,

ராமநாதபுரம் அருகே உள்ள குயவன்குடி பகுதியை சேர்ந்தவர் ராமன். இவருடைய மனைவி முனியம்மாள் (வயது 70). இவர் தனது மகள் முருகேஸ்வரியுடன் காற்றுக்காக வீட்டில் கதவை திறந்து வைத்து விட்டு வாசலை நோக்கி படுத்து தூங்கி கொண்டிருந்தார். நள்ளிரவில் யாரோ மர்ம நபர் முனியம்மாள் கழுத்தில் அணிந்திருந்த 2 பவுன் தங்க சங்கிலியை நைசாக கழற்றி திருடி சென்று விட்டார். திடீரென்று கண்விழித்து பார்த்த முனியம்மாள் தனது கழுத்தில் கிடந்த சங்கிலிகாணாததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து முருகேஸ்வரி அளித்த புகாரின் அடிப்படையில் ராமநாதபுரம் கேணிக்கரை போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Next Story