திருமணமான 4 மாதத்தில் பெண் சாவு
தியாகதுருகம் அருகே திருமணமான 4 மாதத்தில் பெண் இறந்தார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கண்டாச்சிமங்கலம்,
தியாகதுருகம் அருகே சித்தால் கிராமத்தை சேர்ந்தவர் கோவிந்தராஜ் மகன் கந்தசாமி (வயது 23). இவருக்கும் சங்கராபுரம் அருகே மரூர் கிராமத்தை சேர்ந்த சுப்பிரமணியன் மகள் சந்தியா (20) என்பவருக்கும் கடந்த 4 மாதத்திற்கு முன்பு திருமணம் நடைபெற்றது. கடந்த 2 மாதமாக சந்தியா மஞ்சள்காமாலை நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
இந்த நிலையில் வீட்டில் இருந்த சந்தியாவுக்கு நேற்று வாந்தி ஏற்பட்டதால் மயங்கி விழுந்தார். அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் ஆஸ்பத்திரிக்கு செல்லும் வழியில் சந்தியா பரிதாபமாக இறந்தார். இது குறித்து சந்தியாவின் தாய் கமலா தியாகதுருகம் போலீசில் புகார் அளித்தார். அதில் தனது மகளின் சாவில் சந்தேகம் உள்ளது.
போலீசார் விசாரணை
எனவே உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறப்பட்டு இருந்தது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருமணமான 4 மாதத்தில் சந்தியா இறந்ததால் அவரது சாவு குறித்து கள்ளக்குறிச்சி கோட்டாட்சியர் சரவணன் மேல் விசாரணை நடத்தி வருகிறார்.
Related Tags :
Next Story