மகாடா தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரம் 3 பேர் அதிரடி கைது


கோப்பு படம்
x
கோப்பு படம்
தினத்தந்தி 12 Dec 2021 11:45 PM IST (Updated: 12 Dec 2021 11:45 PM IST)
t-max-icont-min-icon

மகாடா தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரத்தில் 3 பேர் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளனர். இதையொட்டி தேர்வு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

புனே, 
மகாடா தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரத்தில் 3 பேர் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளனர். இதையொட்டி தேர்வு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
3 பேர் கைது
மகாடாவில் காலியாக உள்ள பொறியாளர், உதவி சட்ட ஆலோசகர் உள்ளிட்ட பணியிடங்களுக்கு நேற்று (ஞாயிற்றுக்கிழமை) முதல் அடுத்த வாரம் வரை ேதர்வுகள் நடக்க இருந்தன. இந்தநிலையில் மகாடா தேர்வு வினாத்தாளை சிலர் கசியவிட உள்ளதாக புனே போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இந்த தகவலின் பேரில் புனே சைபர் கிரைம் போலீசார் நேற்று முன்தினம் இரவு மகாடா தேர்வு வினாத்தாளை கசியவிட திட்டம் போட்டு இருந்த சாப்ட்வேர் நிறுவன ஊழியர் உள்பட 3 பேரை விஸ்ரந்த்வாடி பகுதியில் வைத்து கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து தேர்வு வினாத்தாளையும் பறிமுதல் செய்தனர்.
தேர்வு ஒத்திவைப்பு
போலீசார் நடத்திய விசாரணையில், குறிப்பிட்ட சாப்ட்வேர் நிறுவனத்தில் தான் மகாடா தேர்வுக்கான வினாத்தாள் தயார் செய்யும் பணி நடந்து உள்ளது. அங்கு பணிபுரியும் ஊழியர் தான் வினாத்தாளை கசியவிட முயற்சி செய்து உள்ளார். அவருடன் கைதான மற்ற 2 பேர் புல்தானாவை சேர்ந்தவர்கள். 
இவர்கள் வினாத்தாளை கசியவிடுவது தொடர்பாக மாநிலத்தின் பல்வேறு பகுதியை சேர்ந்தவர்களுடன் தொடர்பில் இருந்தது தெரியவந்தது. மகாடா தேர்வு வினாத்தாள் கசியவிட முயற்சி நடந்ததாக வெளியான தகவலை அடுத்து, நடைபெற இருந்த மகாடா தேர்வுகள் ஒரு மாதத்திற்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. 
இந்த தகவலை வீட்டு வசதித்துறை மந்திரி ஜித்தேந்திர அவாத் கூறியுள்ளார்.

Next Story