சிங்கம்புணரி, திருப்புவனம் பகுதியில் மின்சாரம் நிறுத்தம்


சிங்கம்புணரி, திருப்புவனம் பகுதியில் மின்சாரம் நிறுத்தம்
x
தினத்தந்தி 12 Dec 2021 11:52 PM IST (Updated: 12 Dec 2021 11:52 PM IST)
t-max-icont-min-icon

சிங்கம்புணரி, திருப்புவனம் பகுதியில் பராமரிப்பு பணிக்காக மின்சாரம் நிறுத்தப்படுகிறது.

சிங்கம்புணரி,

 சிங்கம்புணரி துணை மின்நிலையத்தில் இன்று(திங்கட்கிழமை) பராமரிப்பு பணிகள் நடக்கிறது. எனவே சிங்கம்புணரி நகர், காசியாபிள்ளை நகர், அம்பேத்கர் நகர், சந்திவீரன் கூடம், கண்ணமங்கலம் பட்டி, அரசினம்பட்டி, சிவபுரிபட்டி, குறிஞ்சிநகர், முத்துவடுகநகர், நாட்டார்மங்கலம், நாகப்பன்சேவல்பட்டி, பிரான்மலை, அணைக்கரைப்பட்டி, கிருங்காக்கோட்டை, ஒடுவன்பட்டி, மேலப்பட்டி, செல்லியம்பட்டி, கோட்டை வேங்கைப்பட்டி, செருதப்பட்டி, காளாப்பூர், சதுர்வேதமங்கலம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இன்று காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் வினியோகம் இருக்காது.
இந்த தகவலை மின்செயற்பொறியாளர் செல்லத்துரை தெரிவித்தார்.
 திருப்புவனம் நெல்முடிக்கரை மற்றும் பொட்டபாளையம் துணை மின் நிலையங்களில் நாளை(செவ்வாய்க்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெறுகிறது. எனவே திருப்புவனம் புதூர், பழையூர், செல்லப்பனேந்தல், லாடனேந்தல், அல்லிநகரம், கீழ ராங்கியம், மேலராங்கியம், வயல்சேரி, கலியாந்தூர், மேல வெள்ளூர், கீழ வெள்ளூர், மாங்குடி, அம்பலத்தாடி, மணலூர், அகரம், ஒத்தவீடு, மடப்புரம், பூவந்தி, வடகரை, பொட்டபாளையம், புலியூர், கொந்தகை, கீழடி, சொட்டதட்டி, சைனாபுரம், கரிசல்குளம், காஞ்சரங்குளம், முக்குடி, செங்குளம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நாளை காலை 10 மணி முதல் 2 மணி வரை மின் வினியோகம் இருக்காது. இத்தகவலை திருப்புவனம் மின்வாரிய உதவி செயற்பொறியாளர் உலகப்பன் தெரிவித்துள்ளார்.



Next Story