வழிப்பறியில் ஈடுபட்ட 4 பேர் கைது


வழிப்பறியில் ஈடுபட்ட 4 பேர் கைது
x
தினத்தந்தி 13 Dec 2021 12:34 AM IST (Updated: 13 Dec 2021 12:34 AM IST)
t-max-icont-min-icon

தொடர் வழிப்பறியில் ஈடுபட்ட 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

மதுரை, 
மதுரை மாவட்டத்தில் உள்ள போலீஸ் நிலையங்களில் பதிவான வழிப்பறி மற்றும் மோட்டார் சைக்கிள் திருட்டு வழக்கில் தொடர்பு உடையவர்களை கைது செய்ய, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன் உத்தரவின் பேரில் தனிப் படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீசார் விசாரணை நடத்தியதில், பெருங்குடி, கூடக்கோவில், மேலூர் போலீஸ் நிலையங்களில் தொடர் திருட்டில் ஈடுபட்ட மதுரை மண்டேலா நகரைச் சேர்ந்த ஈஸ்வரமூர்த்தி மகன் முத்து முருகன் (வயது 19), 16 வயது சிறுவன் உள்ளிட்ட 4 பேரை தனிப்படை போலீசார் கைது செய்தனர். குற்றவாளிகளை விரைந்து கைது செய்த சப்-இன்ஸ்பெக்டர் ராமகிருஷ்ணன் தலைமையிலான தனிப்படையினரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாராட்டினார்.

Next Story