வாலிபர் தற்கொலை
அருப்புக்கோட்டையில் வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
அருப்புக்கோட்டை,
அருப்புக்கோட்டை வி.வி.ஆர்.காலனியை சேர்ந்தவர் அந்தோணி ராஜ். இவரது மகன் சுந்தர் (வயது 24). இவருடைய மனைவி சங்கீதா (21). குடித்துவிட்டு வீட்டுக்கு வந்த சுந்தரை, சங்கீதா கண்டித்ததாக கூறப்படுகிறது. இந்தநிலையில் திடீரென அவர் தூக்குப்போட்டு தற்கொலைசெய்ய முயன்றார். உடனே அவரை மீட்டு சிகிச்சைக்காக அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story