வருண்சிங் உடல்நிலை குறித்து, மந்திரி அரக ஞானேந்திரா நேரில் விசாரித்தார்


வருண்சிங் உடல்நிலை குறித்து, மந்திரி அரக ஞானேந்திரா நேரில் விசாரித்தார்
x
தினத்தந்தி 13 Dec 2021 1:05 AM IST (Updated: 13 Dec 2021 1:05 AM IST)
t-max-icont-min-icon

கமாண்டோ ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் வருண்சிங்கின் உடல்நிலை குறித்து மந்திரி அரக ஞானேந்திரா நேரில் விசாரித்தார்.

பெங்களூரு:

பிபின் ராவத் மரணம்

  தமிழ்நாடு நீலகிரி மாவட்டம் குன்னூரில் நடைபெற்ற ஹெலிகாப்டர் விபத்தில் முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் உள்பட 13 பேர் மரணம் அடைந்தனர். இந்த விபத்தில் வருண்சிங் படுகாயம் அடைந்தார். அவரை குன்னூரில் உள்ள வெலிங்டன் ராணுவ ஆஸ்பத்திரியில் அனுமதித்து சிகிச்சை அளித்தனர். பிறகு மேல் சிகிச்சைக்காக அவர் கடந்த 9-ந் தேதி பெங்களூருவுக்கு கொண்டு வரப்பட்டார். இங்குள்ள கமாண்டோ ஆஸ்பத்திரியில் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

  அவர் இன்னமும் அபாய கட்டத்தை தாண்டவில்லை என்றும், அதே நேரத்தில் அவரது முக்கியமான உடல் உறுப்புகள் இயல்பாக செயல்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது. கவர்னர் தாவர்சந்த் கெலாட், முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை ஆகியோர் அந்த ஆஸ்பத்திரிக்கு நேரில் சென்று வருண் சிங்கின் உடல்நிலை குறித்து டாக்டர்களிடம் கேட்டறிந்தனர்.

டாக்டர்களிடம் கேட்டறிந்தார்

  இந்த நிலையில் போலீஸ் மந்திரி அரக ஞானேந்திரா, நேற்று கமாண்டோ ஆஸ்பத்திரிக்கு நேரில் வந்து, வருண்சிங்கின் உடல்நிலை குறித்து டாக்டர்களிடம் கேட்டறிந்தார். 

மேலும் அங்குள்ள வருண்சிங்கின் குடும்பத்தினரையும் சந்தித்த மந்திரி, அவர்களுக்கு தைரியம் கூறினார். இந்த சந்திப்பின்போது மாநில போலீஸ் டி.ஜி.பி. பிரவீன்சூட் உடன் இருந்தார்.

Next Story