அய்யப்ப பக்தர்கள், சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதியது


அய்யப்ப பக்தர்கள், சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதியது
x
தினத்தந்தி 13 Dec 2021 1:27 AM IST (Updated: 13 Dec 2021 1:27 AM IST)
t-max-icont-min-icon

கன்னியாகுமரியில் அய்யப்ப பக்தர்கள், சுற்றுலா பயணிகளின் கூட்டம் அலைமோதியது. காலையில் கடற்கரையில் திரண்டவர்கள் சூரிய உதயத்தை ‘செல்பி’ எடுத்து மகிழ்ந்தனர்.

கன்னியாகுமரி:
கன்னியாகுமரியில்  அய்யப்ப பக்தர்கள், சுற்றுலா பயணிகளின் கூட்டம் அலைமோதியது. காலையில் கடற்கரையில் திரண்டவர்கள் சூரிய உதயத்தை ‘செல்பி’ எடுத்து மகிழ்ந்தனர்.
சுற்றுலா தலம்
சர்வதேச சுற்றுலா தலமான கன்னியாகுமரிக்கு தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகிறார்கள். சபரிமலை சீசன் காலத்தில் அய்யப்ப பக்தர்களின் வருகை அதிகமாக காணப்படும். கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா ஊரடங்கு காரணமாக கன்னியாகுமரிக்கு சுற்றுலா பயணிகளின் வருகை குறைவாக இருந்தது.  
இந்த ஆண்டு சபரிமலை சீசன் தொடங்கிய பின்பும் ஆரம்ப நாட்களில் அய்யப்ப பக்தர்களின் வருகை குறைவாக காணப்பட்டது. தற்போது கடந்த இரு தினங்களாக அய்யப்ப பக்தர்களின் வருகை அதிகரித்து வருகிறது.
சூரிய உதயத்தை                    கண்டு களித்தனர்
இந்தநிலையில், நேற்று விடுமுறை தினம் என்பதால் கன்னியாகுமரியில் அய்யப்ப பக்தர்கள், சுற்றுலா பயணிகளின் கூட்டம் அலைமோதியது. அதிகாலையில் ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என ஏராளமானோர் கடற்கரையில் திரண்டனர். அவர்கள் சூரிய உதயத்தை கண்டு களித்து ‘செல்பி’ எடுத்து மகிழ்ந்தனர். 
பின்னர் கடலில் புனித நீராடி பகவதி அம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்தனர். மேலும், கடலில் நடுவே உள்ள விவேகானந்தர் மண்டபத்துக்கு படகில் ெசன்று கண்டு களித்தனர். 
சுற்றுலா பயணிகளும், அய்யப்ப பக்தர்களும் தங்களுக்கு தேவையான பொருட்களை கடற்கரையில் உள்ள கடைகளில் இருந்து வாங்கி மகிழ்ந்தனர். இதனால், கன்னியாகுமரி கடற்கரையில் உள்ள கடைகளில் வியாபாரம் சூடு பிடித்தது. நீண்ட நாட்களுக்கு பின்பு சுற்றுலா பயணிகளின் கூட்டம் அலைமோதியதால் வியாபாரிகளும் மகிழ்ச்சி அடைந்தனர்.

Next Story