சேலத்தில் ஒரு கிலோ குண்டுமல்லி ரூ.2 ஆயிரத்துக்கு விற்பனை-பொதுமக்கள் அதிர்ச்சி


சேலத்தில் ஒரு கிலோ குண்டுமல்லி ரூ.2 ஆயிரத்துக்கு விற்பனை-பொதுமக்கள் அதிர்ச்சி
x
தினத்தந்தி 13 Dec 2021 3:57 AM IST (Updated: 13 Dec 2021 3:57 AM IST)
t-max-icont-min-icon

சேலத்தில் ஒரு கிலோ குண்டுமல்லி ரூ.2 ஆயிரத்துக்கு விற்பனையானது. இதனால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

சேலம்:
தொடர் கனமழையால் பூக்கள் மகசூல் பெருமளவில் பாதிக்கப்பட்டு உள்ளது. இதனால் சேலம் வ.உ.சி. பூ மார்க்கெட்டிற்கு பூக்கள் வரத்து குறைந்தது. இந்தநிலையில், சேலத்தில் நேற்று காலை குண்டுமல்லி ஒரு கிலோ ரூ.2 ஆயிரத்திற்கு விற்பனை செய்யப்பட்டது. இதனால் சில்லரை பூ வியாபாரிகளும், பூக்களை வாங்க வந்த பொதுமக்களும் அதிர்ச்சி அடைந்தனர். இந்த ஆண்டில் இதுவரை இல்லாத அளவுக்கு குண்டுமல்லி ஒரு கிலோ ரூ.2 ஆயிரத்துக்கு விற்பனை செய்யப்படுவது முதல் முறை என்று பூ வியாபாரிகள் தெரிவித்தனர். முல்லைபூ ஒரு கிலோ ரூ.1,400-க்கும், ஜாதிமல்லி ரூ.720-க்கும், அரளி ரூ.260-க்கும், நந்தியாவட்டம் ரூ.500-க்கும் விற்பனை செய்யப்பட்டது.

Next Story