புதிதாக 42 பேருக்கு நோய் தொற்று: கொரோனா பாதிப்புக்கு 2 முதியவர்கள் பலி
சேலம் மாவட்டத்தில் கொரோனா பாதிப்புக்கு 2 முதியவர்கள் பலியானார்கள். புதிதாக 42 பேருக்கு கொரோனா நோய் தொற்று ஏற்பட்டுள்ளது.
சேலம்:
சேலம் மாவட்டத்தில் நேற்று முன்தினம் 43 பேர் கொரோனாவுக்கு பாதிக்கப்பட்டிருந்தனர். இந்த நிலையில் நேற்று புதிதாக 42 பேருக்கு நோய் தொற்று இருப்பது பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது. சேலம் மாநகராட்சி பகுதியில் 17 பேர், ஓமலூர், அயோத்தியாப்பட்டணம் பகுதிகளில் தலா 2 பேர் மற்றும் காடையாம்பட்டி, மகுடஞ்சாவடி, நங்கவள்ளி, சேலம் ஒன்றியம், தாரமங்கலம், ஆத்தூர், மேட்டூர் பகுதிகளில் தலா ஒருவருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதுதவிர, சேலம் மாவட்டத்திற்கு நாமக்கல் மற்றும் தர்மபுரியில் இருந்து வந்த தலா 3 பேருக்கும், சென்னை, திருச்சியில் இருந்து வந்த தலா 4 பேருக்கும் கொரோனா பாதிப்பு இருப்பது தெரியவந்துள்ளது. இதன்மூலம் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1 லட்சத்து 1,896 ஆக அதிகரித்துள்ளது. அதேநேரத்தில் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வந்த 51 பேர் குணமடைந்துவிட்டதால் நேற்று அவர்கள் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். மேலும், 483 பேர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்கள். சேலம் மாவட்டத்தை சேர்ந்த 61 வயது மற்றும் 75 வயதுடைய 2 முதியவர்கள் கொரோனா பாதிப்புக்கு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வந்தநிலையில் நேற்று அவர்கள் இருவரும் உயிரிழந்தனர். இதனால் மாவட்டத்தில் கொரோனா பலி எண்ணிக்கை 1,717 ஆக அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story