சிலம்பு எக்ஸ்பிரஸ் ரெயிலில் மேல் படுக்கையில் இருந்து தவறி விழுந்த முதியவர் சாவு


சிலம்பு எக்ஸ்பிரஸ் ரெயிலில் மேல் படுக்கையில் இருந்து தவறி விழுந்த முதியவர் சாவு
x
தினத்தந்தி 13 Dec 2021 2:30 PM IST (Updated: 13 Dec 2021 2:30 PM IST)
t-max-icont-min-icon

சிலம்பு எக்ஸ்பிரஸ் ரெயிலில் மேல் படுக்கையில் இருந்து தவறி விழுந்து முதியவர் இறந்து கிடந்தார்.

காரைக்குடி தந்தை பெரியார் நகர், தமிழிசை தெருவைச் சேர்ந்தவர் நாராயணன் (வயது 72). ஓய்வுபெற்ற வங்கி ஊழியரான இவர், சென்னை மண்ணடியில் இருந்து 20 பேரை தென்காசி அருகே உள்ள சாம்பவார் வடகரை கோவிலுக்கு சாமி கும்பிட அழைத்துச் செல்ல காரைக்குடியில் இருந்து நேற்று முன்தினம் இரவு சிலம்பு எக்ஸ்பிரஸ் ரெயிலில் சென்னை வந்து கொண்டிருந்தார். ரெயில் பெட்டியில் உள்ள மேல் படுக்கையில் படுத்து இருந்த நாராயணன், தூக்க கலக்கத்தில் அங்கிருந்து தவறி கீழே விழுந்துவிட்டார். இதில் மூக்கு கண்ணாடி உடைந்ததுடன், அவரது காதில் இருந்து ரத்தம் வழிந்த நிலையில் கீழே கிடந்தார். நேற்று காலையில் இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த சகபயணிகள், இதுபற்றி தாம்பரம் ரெயில்வே போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

எக்ஸ்பிரஸ் ரெயில் தாம்பரம் ரெயில் நிலையம் வந்தடைந்ததும், தயாராக இருந்த டாக்டர்கள் குழுவினர் ரெயில் பெட்டியில் ஏறி அவரை பரிசோதித்தனர். அதில் நாராயணன் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். நாராயணன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்த தாம்பரம் ரெயில்வே போலீசார், மேலும் இதுபற்றி விசாரித்து வருகின்றனர்.


Next Story