காந்தி, நேரு பிறந்தநாளையொட்டி பேச்சுப்போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசுகள் கலெக்டர் வழங்கினார்


காந்தி, நேரு பிறந்தநாளையொட்டி பேச்சுப்போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசுகள் கலெக்டர் வழங்கினார்
x
தினத்தந்தி 13 Dec 2021 5:07 PM IST (Updated: 13 Dec 2021 5:07 PM IST)
t-max-icont-min-icon

தமிழ்வளர்ச்சித்துறை சார்பில் காந்தி, நேரு பிறந்தநாளையொட்டி நடந்த பேச்சுப்போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு கலெக்டர் பரிசு வழங்கினார்.

தேனி:
தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் மகாத்மா காந்தி, ஜவகர்லால் நேரு ஆகியோர் பிறந்தநாளை முன்னிட்டு மாவட்ட அளவில் பேச்சுப்போட்டிகள் நடத்தப்பட்டன. காந்தி பிறந்தநாளையொட்டி நடந்த பேச்சுப்போட்டியில் கூடலூர் என்.எஸ்.கே. பொன்னையா கவுண்டர் மேல்நிலைப்பள்ளி மாணவர் சாகுல் ஹமீது முதலிடமும், தேனி மேலப்பேட்டை இந்து நாடார் உறவின்முறை மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவி அபிநந்தனா 2-வது இடமும், தேனி மேலப்பேட்டை இந்து நாடார் உறவின்முறை வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவி இலக்கியா 3-வது இடமும் பிடித்தனர்.
அரசு பள்ளி மாணவர்களுக்கான சிறப்பு பிரிவில் எ.புதுப்பட்டி அரசு கள்ளர் மேல்நிலைப்பள்ளி மாணவி முத்துசுவாதி, கு.லட்சுமிபுரம் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவி மோனிகா ஆகியோர் சிறப்பு பரிசுகளை பெற்றனர்.
கல்லூரி மாணவ, மாணவிகளுக்கான போட்டியில் உத்தமபாளையம் காஜி கருத்தராவுத்தர் ஹவுதியா கல்லூரி மாணவி சொரூபராணி முதலிடமும், தேனி கம்மவார் சங்க கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர் மணிகண்டபிரபு 2-வது இடமும், பெரியகுளம் அரசு தோட்டக்கலை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய மாணவர் பன்னீர்செல்வம் 3-வது இடமும் பிடித்தனர்.
நேரு பிறந்தநாள்
அதுபோல் நேரு பிறந்தநாளை முன்னிட்டு நடந்த பேச்சுப்போட்டியில் கூடலூர் என்.எஸ்.கே பொன்னையா கவுண்டர் மேல்நிலைப்பள்ளி மாணவர் சாகுல் அமீது முதலிடமும், உத்தமபாளையம் அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி மாணவி சிவசங்கரி 2-வது இடமும், தேனி நாடார் சரசுவதி மேல்நிலைப்பள்ளி மாணவர் பரத்குமார் 3-வது இடமும் பிடித்தனர். அரசு பள்ளி மாணவர்களுக்கான சிறப்பு பரிசு பிரிவில் சில்வார்பட்டி அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி மாணவர் முத்துச்செல்வம், கு.லட்சுமிபுரம் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவி மோனிகா ஆகியோர் சிறப்பு பரிசு பெற்றனர். கல்லூரி மாணவ, மாணவிகளுக்கான போட்டியில் கம்பம் ஸ்ரீஆதிசுஞ்சனகிரி மகளிர் கல்லூரி மாணவி சிந்துஜா முதலிடமும், ஆண்டிப்பட்டி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவி பவித்ரா 2-வது இடமும், வீரபாண்டி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர் ஆரோக்கிய விஜய் 3-வது இடமும் பிடித்தனர். போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசளிப்பு விழா மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. பரிசு மற்றும் சான்றிதழ்களை மாவட்ட கலெக்டர் முரளிதரன் வழங்கி பாராட்டினார். அப்போது தமிழ் வளர்ச்சித்துறை உதவி இயக்குனர் இளங்கோ மற்றும் அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.


Next Story