திருச்செந்தூர் கோவிந்தம்மாள் ஆதித்தனார் மகளிர் கல்லூரியில் ஆங்கிலத்துறை கருத்தரங்கு


திருச்செந்தூர் கோவிந்தம்மாள் ஆதித்தனார் மகளிர் கல்லூரியில் ஆங்கிலத்துறை கருத்தரங்கு
x
தினத்தந்தி 13 Dec 2021 5:41 PM IST (Updated: 13 Dec 2021 5:41 PM IST)
t-max-icont-min-icon

திருச்செந்தூர் கோவிந்தம்மாள் ஆதித்தனார் மகளிர் கல்லூரியில் ஆங்கிலத்துறை இலக்கிய மன்றம் சார்பாக கருத்தரங்கு நடைபெற்றது

திருச்செந்தூர்:
திருச்செந்தூர் கோவிந்தம்மாள் ஆதித்தனார் மகளிர் கல்லூரி ஆங்கில துறையின் இலக்கிய மன்றம் சார்பில், தரம் மேம்படுத்தப்பட்ட இலக்கிய ஆராய்ச்சியில் கோட்பாடுகளின் பங்கு என்ற தலைப்பில், கருத்தரங்கு கல்லூரியில் வைத்து நடைபெற்றது. முதல்வர் ஜெயந்தி தலைமை தாங்கினார். மன்ற செயலாளர் செரின் சத்யா வரவேற்றார். இதில் தூத்துக்குடி வ.உ.சி.கல்லூரியின் ஓய்வு பெற்ற ஆங்கிலத்துறை தலைவர் மணிவண்ணன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, தரம் மேம்படுத்தப்பட்ட இலக்கிய ஆராய்ச்சி குறித்தும், அதில் கோட்பாடுகளின் பங்கு குறித்தும் பேசினார். மன்ற மாணவ செயலாளர் ஹம்சா ஸ்ரீசக்தி நன்றி கூறினார். இதில் ஆங்கில துறை தலைவர் ஆண்டாள் மற்றும் ஆசிரியைகள், மாணவிகள்  கலந்து கொண்டனர்.


Next Story