கும்மிடிப்பூண்டி அருகே கழிவுநீரை அகற்ற கோரி பெண்கள் மறியல்


கும்மிடிப்பூண்டி அருகே கழிவுநீரை அகற்ற கோரி பெண்கள் மறியல்
x
தினத்தந்தி 13 Dec 2021 6:41 PM IST (Updated: 13 Dec 2021 6:41 PM IST)
t-max-icont-min-icon

கும்மிடிப்பூண்டி அருகே கழிவுநீரை அகற்ற கோரி பெண்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கும்மிடிப்பூண்டி அடுத்து உள்ளது சின்ன ஓபுளாபுரம் கிராமம். இங்கு சென்னை-கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையையொட்டி சர்வீஸ் சாலை உள்ளது. இந்த சர்வீஸ் சாலையையொட்டி தனியாருக்கு சொந்தமான 2 வாடகை கட்டிடங்கள் உள்ளன. இந்த தனியார் கட்டிடத்தின் கழிவுநீரானது அப்பகுதியில் விடப்படுவதால் அங்கு சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது. மேலும் அப்பகுதியில் குடிநீர் குழாய் அருகேயும் அந்த கழிவுநீர் தேங்கி நிற்பதால் அப்பகுதியை சுற்றி உள்ள குடியிருப்புவாசிகள் கடுமையாக பாதிக்கப்பட்டு வந்தனர். 

இந்தநிலையில், தனியார் கட்டிட கழிவுநீரை உரிய முறையில் அகற்றிட நடவடிக்கை எடுக்ககோரி அப்பகுதியை சுற்றி உள்ள குடியிருப்பை சேர்ந்த சுமார் 30 பெண்கள் நேற்று அந்த சர்வீஸ் சாலையில் அமர்ந்து திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்து அங்கு வந்த கும்மிடிப்பூண்டி தாசில்தார் மகேஷ், போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலசுப்பிரமணி, ஊராட்சி மன்ற தலைவர் செவ்வந்தி மனோஜ் ஆகியோர் அப்பகுதியில் தேங்கிய கழிவுநீரை அகற்ற தனியார் கட்டிட உரிமையாளர் மூலம் உடனடியாக அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர்.இதனையடுத்து போராட்டத்தை கைவிட்டு அனைவரும் கலைந்து சென்றனர்.


Next Story