அஞ்சல்அட்டையில் கடிதம் எழுதும் போட்டி


அஞ்சல்அட்டையில்  கடிதம் எழுதும் போட்டி
x
தினத்தந்தி 13 Dec 2021 9:31 PM IST (Updated: 13 Dec 2021 9:31 PM IST)
t-max-icont-min-icon

அஞ்சல்அட்டையில் கடிதம் எழுதும் போட்டி

உடுமலை,
உடுமலை தளி சாலையில் உள்ள பாரதியார் நூற்றாண்டு நினைவு அரசு பெண்கள்மேல்நிலைப்பள்ளியில், இந்திய அஞ்சல் துறை மற்றும் தமிழ் நாடு அரசு பள்ளிக்கல்வித்துறையுடன் இணைந்து நடத்தும் பள்ளி மாணவியர்களுக்கான கடிதம் எழுதும் போட்டி நடத்தப்பட்டது. எனது பார்வையில் இந்தியா 2047 மற்றும் விடுதலைப்போரில் வெளிச்சத்திற்கு வராத வீரர்கள்  என்ற தலைப்புகளில் அஞ்சல் அட்டையில் கடிதம் எழுதும் போட்டி நடைபெற்றது. போட்டிகளை பள்ளி தலைமை ஆசிரியர் ப.விஜயா தொடங்கி வைத்தார். உதவித்தலைமை ஆசிரியர் டி.சிவக்குமார் முன்னிலை வகித்தார். தமிழாசிரியர்கள் வே.சின்னராசு, ஆர்.ராஜேந்திரன், ஆர்.கார்த்திகா, உடற்கல்வி ஆசிரியர் கிருஷ்ணவேணி ஆகியோர் போட்டியை ஒருங்கிணைத்தனர். இந்த போட்டியில் 100-க்கும் மேற்பட்ட மாணவிகள் ஆர்வமுடன் கலந்துகொண்டனர்.

Next Story