ஆம்பூர் அருகே சந்தனக்கட்டை கடத்தியவர் கைது


ஆம்பூர் அருகே சந்தனக்கட்டை கடத்தியவர் கைது
x
தினத்தந்தி 13 Dec 2021 9:41 PM IST (Updated: 13 Dec 2021 9:41 PM IST)
t-max-icont-min-icon

சந்தனக்கட்டை கடத்தியவர் கைது

ஆம்பூர்

ஆம்பூரை அடுத்த நாயக்கனேரி ஊராட்சி பனங்காட்டேரி பகுதியில் நேற்று முன்தினம் வனச்சரக அலுவலர் இளங்கோவன் தலைமையில் வனத்துறையினர் தீவிர ரோந்துச்சென்றனர். அப்போது அந்த வழியாக மோட்டார்க்கிளில் 2 பேர் வந்தனர். வனத்துறையினரை பார்த்ததும் அவர்கள் தப்பி ெசல்ல முயன்றனர்.

வனத்துறையினர் விரட்டிச் சென்று மோட்டார்சைக்கிளை மடக்கி அவர்களை பிடித்தனர். அப்போது மோட்டார்சைக்கிளில் பின்னால் அமர்ந்து வந்தவர் கீழே இறங்கி தப்பியோடி விட்டார்.

மோட்டார்சைக்கிளை ஓட்டி வந்தவரை பிடித்து விசாரித்தனர். அவர், அதேபகுதியைச் சேர்ந்த அழகேசன் (வயது 35) என்றும், தப்பியோடியவர் அதே பகுதியைச் சேர்ந்த மற்றொரு நபர் என்றும் தெரியவந்தது. மோட்டார்சைக்கிளில் 3 கிலோ எடையில் சந்தனக்கட்டைகள் கடத்தி வந்தது தெரிந்தது. 

இதுகுறித்து வனத்துறையினர் வழக்குப்பதிவு செய்து அழகேசனை கைது செய்தனர். அவரிடம் இருந்து மோட்டார்சைக்கிள், 3 கிலோ சந்தனக்கட்டையை பறிமுதல் செய்தனர்.

Next Story