வாலிபரிடம் செல்போன் பறித்த 3 பேர் கைது


வாலிபரிடம் செல்போன் பறித்த 3 பேர் கைது
x
தினத்தந்தி 13 Dec 2021 9:42 PM IST (Updated: 13 Dec 2021 9:42 PM IST)
t-max-icont-min-icon

வாலிபரிடம் செல்போன் பறித்த 3 பேர் கைது

திருப்பூர், 
ஈரோடு மாவட்டம் நம்பியூரை சேர்ந்தவர் சக்திமுருகன் (வயது 28). இவர் சம்பவத்தன்று இரவு மோட்டார் சைக்கிளில் புஷ்பா சந்திப்பு பகுதியில் சென்றபோது மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேர், கத்தியை காட்டி மிரட்டி அவரிடம் இருந்து ரூ.1,000 மதிப்புள்ள செல்போனை பறித்துக்கொண்டு தப்பினர். இதுகுறித்து சக்திமுருகன் அளித்த புகாரின் பேரில் திருப்பூர் வடக்கு குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள்.
இந்தநிலையில் இந்த சம்பவம் தொடர்பாக திருப்பூர் பெரியதோட்டத்தை சேர்ந்த அப்பாஸ் (வயது 19), ஆசிக் அகமது (21), சர்புதீன் (21) ஆகியோரை போலீசார் கைது செய்து அவர்களிடம் இருந்து செல்போன் மற்றும் மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்தனர். இந்த 3 பேரும் தெற்கு போலீஸ் நிலையத்துக்கு உட்பட்ட பகுதியில் 3 செல்போன்கள் பறித்த வழக்கிலும் தொடர்புடையது தெரியவந்தது. அவர்களிடம் இருந்து 3 செல்போன்களை தெற்கு போலீசார் பறிமுதல் செய்தனர்.

Related Tags :
Next Story