தினத்தந்தி புகார் பெட்டி


தினத்தந்தி புகார் பெட்டி
x

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89396 58888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகளை பார்க்கலாம்.

திண்டுக்கல்: 

குவிந்து கிடக்கும் குப்பைகள்
வத்தலக்குண்டு பேரூராட்சி உள்கடைவீதியில் குப்பை தொட்டிகள் இல்லாததால் சாலையோரங்களில் குப்பைகள் கொட்டப்படுகின்றன. இதனால் அந்த பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுவதுடன் சுகாதாரக்கேடு ஏற்பட்டுள்ளது. எனவே குவிந்து கிடக்கும் குப்பைகளை அகற்றுவதுடன் அந்த இடங்களில் குப்பை தொட்டிகள் வைக்கவும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-அலாவுதீன், வத்தலக்குண்டு.

ஓடை நீர்வழித்தடம் ஆக்கிரமிப்பு
ஆத்தூர் தாலுகா சித்தரேவு ஊராட்சி தாண்டிக்குடி மலையடிவாரத்தில் கோழி ஊத்து ஓடை உள்ளது. இந்த ஓடைக்கு தண்ணீர் வரும் வழித்தடங்கள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதால் மழைக்காலங்களில் ஓடையில் தண்ணீர் வருவது இல்லை. இதனால் விவசாயிகள் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே ஆக்கிரமிப்பை அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-வேலுப்பிள்ளை, சித்தரேவு.

சாக்கடை கால்வாயில் அடைப்பு
திண்டுக்கல் குள்ளனம்பட்டி துர்க்கை அம்மன் கோவில் தெருவில் உள்ள சாக்கடை கால்வாயில் தூர்வாரும் பணி மேற்கொள்ளப்படாததால் அடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் கழிவுநீர் வெளியேற முடியாமல் கால்வாயிலேயே தேங்கி நிற்பதால் துர்நாற்றம் வீசுகிறது. மேலும் கொசுப்புழுக்கள் உற்பத்தியும் அதிகரித்துள்ளது. எனவே சாக்கடை கால்வாயை தூர்வார சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-குணசீலன், குள்ளனம்பட்டி.

சாலையில் வீணாக செல்லும் குடிநீர் 
திண்டுக்கல் பேகம்பூர் யானைத்தெப்பம் அருகே சாலையோரத்தில் பதிக்கப்பட்ட குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வெளியேறி வீணாக சாலையில் செல்கிறது. இதே நிலை நீடித்தால் பேகம்பூர் பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே குடிநீர் குழாயில் ஏற்பட்ட உடைப்பை விரைந்து சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-சகாபுதீன், பேகம்பூர்.

Next Story