செஞ்சி அருகே வீடு புகுந்து நகை திருட்டு


செஞ்சி அருகே வீடு புகுந்து நகை திருட்டு
x
தினத்தந்தி 13 Dec 2021 10:26 PM IST (Updated: 13 Dec 2021 10:26 PM IST)
t-max-icont-min-icon

செஞ்சி அருகே வீடு புகுந்து நகையை மா்ம மனிதா்கள் திருடி சென்று விட்டனா்.


செஞ்சி, 

செஞ்சி அருகே உள்ள நாகம் பூண்டியை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் மகன் வெண்ணி (வயது 46). இவர் நேற்று முன்தினம் காலை தனது குழந்தைகளுடன் வெளியே சென்று இருந்தார்.

  மாலையில் திரும்பி வந்து பார்த்த போது, வீட்டின் கதவு நெம்பி திறக்கப்பட்டு இருந்தது.

 மேலும் வீட்டில் இருந்த 1¼ பவுன் நகை, ½ கிலோ வெள்ளி பொருட்கள் ஆகியன திருடு போயிருந்தது. இதன் மொத்த மதிப்பு ரூ.70 ஆயிரம் இருக்கும் என்று கூறப்படுகிறது. 

 இதுகுறித்த புகாரின் பேரில் அனந்தபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Next Story