தேன்கனிக்கோட்டையில் மனு கொடுக்கும் போராட்டம்
தேன்கனிக்கோட்டையில் மனு கொடுக்கும் போராட்டம் நடந்தது.
தேன்கனிக்கோட்டை:
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மழையால் சேதமடைந்த பயிர்களுக்கு உரிய நிவாரணம் வழங்கக்கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் தேன்கனிக்கோட்டை தாலுகா அலுவலகத்தில் மனு கொடுக்கும் போராட்டம் நடந்தது. விவசாயிகள் சங்க வட்ட தலைவர் சந்திரசேகர் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் பிரகாஷ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி செயலாளர் சேகர், மாவட்ட முன்னாள் செயலாளர் ஜெயராமன், ஒன்றிய செயலாளர்கள் சீனிவாசன், வெங்கடேஷ், வட்ட செயலாளர் அனுமப்பா ஆகியோர் கோரிக்கை குறித்து பேசினர். முடிவில் வருவாய் ஆய்வாளர் சேகரிடம் விவசாயிகள் தங்களது கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை வழங்கினர்.
Related Tags :
Next Story