வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் பெண்ணின் ஸ்கூட்டரை மாற்றி எடுத்துச் சென்ற நபரால் பரபரப்பு


வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் பெண்ணின் ஸ்கூட்டரை மாற்றி எடுத்துச் சென்ற நபரால் பரபரப்பு
x
தினத்தந்தி 13 Dec 2021 10:51 PM IST (Updated: 13 Dec 2021 10:51 PM IST)
t-max-icont-min-icon

பெண்ணின் ஸ்கூட்டரை மாற்றி எடுத்துச் சென்ற நபரால் பரபரப்பு

வேலூர்

வேலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு பல்வேறு காரணங்களுக்காக ஏராளமானவர்கள் வருகின்றனர். இந்தநிலையில் நேற்று சத்துவாச்சாரியை சேர்ந்த சங்கீதா என்பவர் வந்திருந்தார். அவர் தனது ஸ்கூட்டரை அலுவலக வளாகத்தில் நிறுத்திவிட்டு மக்கள் குறைதீர்வு கூட்டத்துக்கு சென்றார். சிறிது நேரத்துக்கு பின்னர் வந்து பார்த்தபோது அவரது ஸ்கூட்டரை ககாணவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த சங்கீதா கலெக்டர் அலுவலக வளாகத்தில் தேடிப்பார்த்தார். எனினும் அவரது ஸ்கூட்டர் கிடைக்கவில்லை. ஆனால் அவர் மொபட் நிறுத்தியிருந்த பகுதியில் அவரது ஸ்கூட்டர்் போன்றே மற்றொரு மொபட் இருந்தது.

யாரோ ஸ்கூட்டரை மாற்றி எடுத்துச் சென்றிருக்கலாம் என்று கருதிய அவர் இதுகுறித்து சத்துவாச்சாரி இன்ஸ்பெக்டர் கருணாகரனிடம் தெரிவித்தார். இதையடுத்து போலீசார் அங்கு உடனடியாக வந்து அங்கு நின்றிருந்த ஸ்கூட்டர் உரிமையாளரை கண்டறிந்தனர். உரிமையாளர் விருதம்பட்டை சேர்ந்தவர் என்பதும், வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் வேலைபார்த்ததும் தெரியவந்தது. 

அவர்தான், அவரது ஸ்கூட்டருக்கு பதில் சங்கீதாவின் ஸ்கூட்டரை மாற்றி எடுத்துச் சென்றது தெரியவந்தது. இதையடுத்து அந்த நபரை வரவழைத்து ஸ்கூட்டரை மீட்டு மீண்டும் சங்கீதாவிடம் போலீசார் ஒப்படைத்தனர். புகார் அளித்த 30 நிமிடங்களில் போலீசார் வாகனத்தை மீட்டுக்கொடுத்தனர். இதனால் போலீசாருக்கு சங்கீதா நன்றி தெரிவித்தார்.

Next Story