கொசவன்புதூர் கிராமத்தில் ஈக்கள் தொல்லையால் பொதுமக்கள் அவதி
ஈக்கள் தொல்லையால் பொதுமக்கள் அவதி
கே.வி.குப்பம்
கே.வி.குப்பத்தை அடுத்த கொசவன்புதூர் கிராமத்தில் 500-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் ரசித்து வருகின்றனர். இங்கு கடந்த சில நாட்களாக ஈக்களின் தொல்லை அதிகரித்துள்ளது. வீடுகளுக்குள் கூட்டம் கூட்டமாக ஈக்கள் படையெடுத்து உணவுப் பொருள்கள் மீது மொய்ப்பது அதிகரித்து வந்துள்ளது. இதனால் சமையல் செய்ய முடியாமலும், சமையல் செய்து வைத்துள்ள உணவுப் பொருட்களின் மீது ஈக்கள் கூட்டமாக மொய்த்தும் வருகின்றன. இதனால் பொதுமக்கள் பெரிதும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
இதுகுறித்து பொது மக்கள் முதல்-அமைச்சரின் தனிப்பிரிவுக்குப் புகார் அளித்தனர். அதைத்தொடர்ந்து மாவட்ட கலெக்டர் குமாரவேல் பாண்டியன் உத்தரவின் பேரில் இப்பகுதியை ஆய்வு செய்து சுகாதாரத்துறையினர் கிருமிநாசினி மற்றும் பிளீச்சிங் பவுடர் தெளித்து நோய்த்தடுப்புப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். நிரந்தரமாக ஈக்களை கட்டுப்படுத்த அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
Related Tags :
Next Story